பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

195


கோல் பிடித்த பிள்ளை குரங்கு.

கோல் பிடித்தவன் கோமான்: தண்டம் பிடித்தவன் தண்டல்காரன்.

கோலச் சமத்தி, கோலச் சமத்தி என்றாளாம்: அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம். 10015


கோவணத்தில் இடி விழுந்தது என்றாளாம்.

கோவணத்தில் ஒரு பணம் இருந்தால் கோழி கூப்பிடும் வேளையில் ஒரு பாட்டு வரும்:

(ஒரு காசு கோழி கூப்பிடும் போதே.)

கோவணத்தில் முக்கால் துட்டு இருந்தால் கோழி கூப்பிடப்பாட்டு வரும்.

(காசு இருந்தால்.)

கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரம் இல்லை.

கோவணத்தை அவிழ்த்து மேற்கட்டுக் கட்டுகிறது. 10020


கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

கோவணம் பீயைத் தாங்குமா?

கோவணாண்டிக்குக் குடித்தனம் பெருத்ததுபோல.

(யாழ்ப்பாண வழக்கு.)

கோவணாண்டி துணிவிலும் கோடிச் சீமான் துணிவா.

(துணிவு)

கோவிந்தா என்றால் கோடி ஸ்நானம் என்று குளிக்காமல் முழுகாமல் இருக்கலாமா? 10025


கோவில் ஆனை கல் ஆனை.

கோவில் இடிக்கத் துணித்தவனா குளம் வெட்டப் போகிறான்?

(குளம் கட்ட)

கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்.

கோவில் கட்டி அல்லவா விளக்குப் போடவேண்டும்?

கோவில் கட்டிக் குச்சு நாயைக் காவல்; மாடி வீட்டைக் கட்டி மரநாயைக் காவல். 10030


கோவில் கல்லைப் பிடுங்கப் போகிறான்.

கோவில் காளை போலத் திரிகிறான்.

கோவில் குளம் போகாத கோபி சாஸ்திரி; கன்னி குளம் போகாத கன்யா சாஸ்திரி.