பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

39


கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.

கடிக்க ஓர் எலும்பும் இல்லை. 6545 .


கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம்.

கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க் கீற்றுப் போட்டாற் போல.

கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?

(கடித்த நாகம்.)

கடிக்கிற நாய்க்குக் கழுத்திற் குறுங்கயிறு.

கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை. 6550


கடிகோலிலே கட்டின நாய்.

கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.

கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது.

கடித்த நாயை வெறி நாய் என்பது போல.

கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள். 6555


கடித்த பாக்குக் கொடாத சிற்றன்னை கடற்கரை மட்டும் வழியனுப்பினாளாம்.

கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.

(காத வழி வந்தானாம்.)

கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷத்தைத்தான் தரும்.

(கக்கும்.)

கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும்.

கடித்த மூட்டை, கடியாத மூட்டை, எல்லா மூட்டையும் சரிதான். 6560


கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.

கடித்த வாய் துடைத்தாற் போல.

(வாய் துடித்தாற் போல.)

கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா ஜந்து.

கடித்தாலும் கடிக்கட்டும்; நீ சொல்லாதிரு.

(சும்மாயிரு.)

கடித்த பாக்குக் கொடுக்காத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழித்துக் கொண்டு வழிவிடுவான். 6565

(சிற்றன்னை; வழிவிடுவாள்.)