பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

101



மொட்டைத் தலையில் பேய் வருமா?

மொட்டைத் தலையில் பேன் சேருமா?

(பேன் போல.)

மொட்டைத் தலையும் குடுமித் தலையுமாய்ப் பிணைக்கிறது. 19245


மொட்டைத்தாதன் ஊரிலே மொட்டையனைத் தேடியது போல.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தால் எடுப்பார் இல்லை,

பிடிப்பார் இல்லை.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்.

மொட்டைத்தாளம் குட்டையில் விழுந்தாற் போலே.

மொட்டை மரத்திலே முந்நூறு காக்காய்; தட்டிப் பார்த்தால்

ஒன்றும் இல்லை. 19250


மொட்டைமாடு தலையைக் கழற்றிக் கொண்டது போல.

மொட்டை மாடும் சரி, கொம்பு மாடும் சரி.

மொண்டி மாடு வந்துதான் பட்டி அடைக்க வேண்டும்.

மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டா முடியும்?

(நிறையும்?)

மொண்டு தின்கிற வீட்டில் கொண்டு தின்று முடியுமா? 19255


மொட்டைச் சோற்றுக்கு மோளம் அடிக்கிறான்.

(மேளம்,)

மொந்தைத் தன்ணீரில் வீடு வெந்து போனால் மிடாத்தண்ணீருக்கு

எப்படி?

மொரோ என்றவன் கழுத்தில் லிங்கத்தைக் கட்டினானாம்.

(முறையோ.)

மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

மொழி தவறாதவன் வழி தவறாதவன். 19260


மொழியது அற மொழி.

(மொழி வழி.)

மொழிவது மறுக்கின் அழிவது தருமம்.