பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

201


தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கிறான்.

தன் உயில் வெல்லம்.

தாய் ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். 145


தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்.

தாவிப் படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடி போல் தவிக்கிறான்.

திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி அலுத்தேன்.

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீது.

தீயார் சொல் கேட்பதுவும் தீது. 150


தீயாரைக் காண்பதுவும் தீது.

தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீது.

துன்பம் உண்டேல் இன்பம் உண்டு.

தைப்பூசம் பறைப் பூசம்.

தோளாத சுரையோ தொமும்பர் செவி? 155


தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.

நடு ஊரிலே பழுத்த மரம் போல.

நஙதா விளக்கனைய நாயகன்.

நம்புவதே வழி.

நமது குடுமி அவன் கையில் சிக்கியது. 160


நரி வரால் கவ்வச் சென்று நற்றசை இழந்தது போல,

நல்லார் குணங்கள் டிரைப்பதுவும் நன்று.

நல்லார் சொற் கேட்பதுவும் நன்று.

நல்லாரைக் காண்பதுவும் நன்று.

நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 165


நாய் ஏறி விழகிலென்? நடாத்திலென்?

நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; கழுகுககு மூக்கில் வேர்க்கும்.

நாயாய்ப பிறக்கினும நல வேடடை ஆடி நலம் புரியும்.

நாள் செய்வது நல்லோர் செய்யார்.

நிலவரை நீலம உண்டதும் வெள்ளை நிறமாகும். 170


நிரைச் சுருக்கி நெய்யை உருக்கி மோரைப் பெருக்கி உண்.

நெற்றியில் ஒற்றைக் கண் படைத்தவன்.

பகற்கனவு காண்கிறான்.

பலவின் கனி ஈ துன்னுமதுபோல்.

பழிக்குப் பழி கொடடா. 175