பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகுதி 4

பெ


பெட்டிப் பாம்பு ஒட்டி அடங்கினாற் போல.

பெட்டிப் பாம்பு போல் அடங்கினான்.

பெட்டிப் பாம்பு போல் ஒட்டி இருக்கும். 15970


பெட்டி பீற்றல், வாய்க்கட்டுத் திறம்.

பெட்டி பீற்றலாயினும் மட்டைக்கட்டுத் திறமாயிருக்க வேண்டும்.

பெட்டியில் அடக்கின குட்டிப் பாம்பு போல.

பெட்டியும் முடியும் பிளந்தாற் போல.

பெட்டைக்கு எட்டாத அகமுடையானும் பல்லுக்கு எட்டாத பாக்கும். 16975


பெட்டைக் குதிரைக்கு இரட்டைக் கொம்பு முளைத்தன என்றாளாம்.

பெட்டைக் கோழி கூவியா பொழுது விடிகிறது?

பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

பெட்டை நாயைப் போலக் கத்தாதே.

பெண் அரமயை கூத்துக்குப் போய்ப் பேய்க் கூத்து ஆச்சுதே. 16980


பெண் அழகு எல்லாம் பெட்டியிலே.

பெண் ஆசை ஒரு பக்கம்; மண் ஆசை ஒரு பக்கம்.

பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது.

பெண் ஆனையைத் தொடரும் பேரானையைப் போல.

(போராணையை.)

பெண் இருக்கிற அழகுக்குப் பூசினாளாம் வண்டி, மசியை; தான் இருக்கிற அழகுக்குப் பூசிக் கொண்டாளாம் வேப்பெண்ணெய். 16985


பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண் என்று பிறந்த போதே புருஷன் பிறந்திருப்பான்.