பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ்ப் பழமொழிகள்


மாவாய்த் தின்றால் என்ன? கொழுக்கட்டையாய்த் தின்றால் என்ன?

மாவாய்த் தின்றால் பணியாரம் இல்லை.

மாவிலும் ஓட்டலாம்; மாங்காயிலும் ஓட்டலாம். 18515 18475

(தேங்காயிலும் ஓட்டலாம்.)


மாவிலும் மரத்திலும் தட்டாமல்.

மாவின் குணமே கூழின் குணம்.

மாவு இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் கொதித்தால் கூடிக்கொள்கிறது.

மாவு இருக்கிற மணம் போல் கூழ் இருக்கிற குணம்.

மாவுக்குத் தக்க பணியாரம். 18520


மாவுக்குத் தலமா வாய்?

மாவுக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை.

மாவு புளிக்கிறதெல்லாம் பணியாரத்து நலம்.

மாவுத்துக்காரனுக்கு ஆனையிலே சாவு.

மாவு தின்றால் பணியாரம் ஆகாது. 18525


மாவும் தேனும் போல.

மாவும் போச்சுது; மாவு கட்டின துணியும் போச்சுது; இனி என்ன உறவு?

மாவு மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?

மாவேகம் மனோ வேகமாய்ப் பேசுகிறான்.

18475

(ஓடுகிறான்.)

மாவைத் தின்றால் அப்பம் இல்லை. 18530


மாவைத் தின்றால் பணியாரம் இல்லை; பணியாரம் தின்றால் மாவு இல்லை.

மாவைத் தின்றால் பணியாரம் இல்லை; பெண்டாட்டியைத் தின்றால் பிள்ளை இல்லை.

மாளய பட்சத்துச் சாஸ்திகள்; மார்கழி மாதத்து நம்பியான்; மாசி மாதத்துக் கடா.

மாளாத பணத்துக்கு ஒரு மண்டி வைத்துப் பார்த்தானாம்.

மாளிகை கட்டி மரநாய் கட்டினது போல. 18535


மாளிகையைக் கட்டி வன்குரங்கைக் கட்டினது போல.

மாற்றாந்தாய் மூத்தாள் பிள்ளைக்குக் கால் கழுவினது போல.

மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு.