பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேக்கிப் புலவர் 92 முதலான நங்கைப் பாடல்களைப்பாடி அக் கங்கையர் களுக்குக் கொடுத்து வந்தனர். அவற்றைப் பெற்ற பெண்டிர் மனம் மகிழ்ந்து புலவர்க்கு வேண்டிய உணவு, பட்சணம், பழம் முதலியவற்றைக் கொடுத்து வந்தனர். அவற்றை உண்டு புகழேந்தியார் இன்புற்று வந்தார். கற்றவர் எங்கு இருந்தால் என்ன? அவர்கட்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்புத்தானே. ஆகவே, புகழேந்தியார் சிறையில் இருந்தாலும் சிறப்பாகவே இருந்தனர். புகழேந்தியார் உண்டு மிகுந்ததைக் காவ லாளர்கள் உண்டு மகிழ்ந்து வந்ததனுல் மாதர்கள் புலவருக்குக் கொடுக்கும் உணவைத் தடை செய்திலர்: அரசனுக்கும் இந்தச் செய்தியினே அறிவித்திலர். ஒரு காள் குலோத்துங்க மன்னனும், ஒட்டக் கூத்தரும் புகழேந்தியார் இருந்த சிறைக் கோட்டத் தின் அருகே சென்றபோது புகழேந்தியார் சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். மன்னன் தன்னுடன் இருந்த புலவரைப் பார்த்து “உள்ளே இருக்கும் அவரும் ஒரு சிறந்த புலவர் அல்லவா?’ என்று வினவினன். ஒட்டக் கூத்தர் உடனே, அப்புலவரைவிடத் தாமே மேம்பட்டவர் என் பதை விளக்க மன்ன, புலிக்கு முன் மான்கிற்குமோ? நெருப்புக்கு முன் வற்றிய் காடு இருக்க.வல்லதோ: சுரு:மீனுக்கு முன் மீன் கிற்க வல்லதோ ? குரியன் முன் பணி நிற்குமோ?” என்னும் கருத்தில் பாடலைப் பாடினர். இதைக் கேட்ட புகழ்ேந்தியார் சும்மா இரா மல்,"மன்னு, இப்பாடலஓட்டிப்ப்ாடவோ? அன்றி வெட்டிப் பாடவோ ?” என்று கேட்க, சோழ மன்னன் ஒட்டக் கூத்தருக்கு இழிவு வராதிருக்க வேண்டும் என்பதற்காவும், அவர் தம் ஆசிரியர் ஆதலின் தன்