பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ்ப் புலவர் அறுவர் சேக்கிழார் மந்திரியாதல் அந்தக் காலத்தில் தொண்டை நாட்டுத் தலைவன் சோழ மன்னல்ை அனுப்பப்பட்ட ஒலேயைப் பார்த்து, இந்தக்கேள்விகளுக்குப் பதில் கூற வல்லவர் சேக்கிழார் பெருமான் அன்றி, மற்ற எவராலும் இயலாது என்று ணர்ந்து, அன்னவரை வரவழைத்து அந்த ஒலேயைக் காண்பித்தனன். அருண்மொழித் தேவராம் சேக்கிழார் அதை அன்புடன் வாங்கிப் படித்து அக மகிழ்ந்து அவ்வோலேயிலேயே மூன்று திருக்குறள் பாக்களைப் பதிலாக எழுதி உடனே கொடுத்துவிட்டார். கேள் விகள் மிகவும் கடினமானவை. இவற்றிற்கு எப்படிப் பதில் கூறுவது? என்ன பதில் பொருந்தும்? என்று யோசித்துக் கொண்டிருந்த தொண்டை நாட்டுத் தலை வன், சேக்கிழார் அளித்த ஒலேயை வாங்கி ஊன்றிப் படிக்கலுற்ருன். அதில், " காலத்தில்ை செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப் பெரிது ” ' பயன்துரக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடவில் பெரிது" * நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது ” என்பவைகள் விடையாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டு, அவைகள் அந்தக் கேள்விகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்று அகமகிழ்ந்து, சேக்கிழா ருக்குப் பல சன்மானங்கள் அளித்துப் பதிலேச் சோழ மன்னன் ஆள் வசமே கொடுத்தனுப்பினன். தொண்டை நாட்டிலிருந்து வந்த விடைகளைக் குலோத்துங்க மன்னன் பார்த்தான் , அளவில்லாத