பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} தமிழ்ப் புலவர் அறுவர் வைக்காமல், 'தங்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவை யத்து முந்தி இருப்பச் செயல்” என்னும் வள்ளுவனர் வாக்கினை உட்கொண்டு, தம் திருக்குமாரர்ைக்குக் கல்வி யினைப் பயிற்றுவித்து வந்தார். கச்சியப்பரும் காலத்தை வீண்போக்காமல் கல்வியில் கருத்துன்றி வடமொழி வியாகாண வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலியவற்றையும், கண்டமிழ் மொழியில் அகத்தியம் தெர்ல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், சைவத் திருமுறைகள் முதலானவர் றையும் சந்தேக விபரீதம் யாதும் நேராவண்ணம் கற் றுத் தேர்ந்தார். கல்வி வளர்ந்தது போல வயது வளர்ந்து வந்தது. கச்சியப்பர் சகலாகம பண்டிதராய்த் தமிழ்க் கடலாய் விளங்கி, கச்சியப்ப சிவாசாரியார் என்று யாவரும் அழைக்கத் தக்க ஆண்டினேயும் கிரம்பப் பெற்ருர், கந்த புராணம் பாடி முடித்தல் கச்சியப்ப சிவாசாரியார் தம் தங்தையார் வயது முதிர்ந்து மூப்புற்றமையால் அன்னர் செய்து வந்த அரும்பணியாகிய குமரனே முப்போதும் தீண்டிப் பூசன்னபுரியும் தொழிலில் தாமும் ஈடுபட்டார். அதாவது குமர கோட்டத்துக்கு அர்ச்சகரானர். குமரனே வழி பட, வழிபட அவனிடத்தில் அன்பும் மிகுவதாயிற்று. அல்லும் பகலும் அறுமுகனுர் உருவமே இவருடைய உள்ளத்தில் குடி கொண்டது. காஞ்சிபுரவாசிகள் கச்சியப்ப சிவாசாரியருடைய கல்வியின் ஆழத்தை உணர்ந்து, வடமொழியில் உள்ள மகா ஸ்காந்தத்தைத் தமிழ் மொழியில் பாடிக் கரும்படி இவரை வேண்டினர். இவரும் இப்பணியினை லம்