பக்கம்:தமிழ்மாலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அமைதிகொள்ள வைக்கும் உத்தி. முடிவில் கோகிலா, தெய்வநாயகம் கூடிவாழ்தல் இன்பியல் புதினமாக்குகிறது.

இப்புதினத்தில் முகவுரை ஆங்கிலத்தில் மிக நீண்டதாக எழுதப்பட்டுள்ளது. தம்பை இணைத்துக் கதையிறுதி முடங்கல் அமையினும் அம்முடங்கலுக்குத் தலைப்பாகப் பின்னுரை' என்று அடிகளார் தந்திருப்பது உண்மையை ஒரங்கட்டாது புதுஉத்திகொண்டதாகிறது.மொத்தத்தில் கோகிலா பாரதியின் புதுமைப்பெண்; பாவேந்தரின் புரட்சிப் பெண்; அடிகளாரின் குறிக்கோள் பெண்.

கோகிலாம்பாள் கடிதங்கள் தமிழ்ப்புதினத்தின் வைர விண்மீன்.

இப்புதினங்களோடு காலதயன் கீசிலான்கதை, தேமணிக்கதை, நெறிக் கதைகள் எனச் சின்னஞ்சிறு கதைகளையும் எழுதித் தம் இதழில் வெளியிட்டுள்ளார்.இவையெல்லாம் அறநெறிக் கதைகள்.

(11. வாழ்வியல்நூல்கள் அவற்றின் முதன்மைப்பற்றி முன்னர் வைக்கப்பட்டன)

12. மொழியியல் (3 நூல்கள்)

உயிரினத்தில் மாந்தனை மேம்பாட்டியலில் நிறுத்தியது மொழி. அதன் இயலைப் பற்றியது மொழியியல், இயல் என்றால் தன்மை என்று பொருள்; தன்மைகளை வரையறைப்படுத்தும் இலக்கணம் என்றும் பொருள்.

இவ்வியல் ஒரு தனிக்கலை. இது ஒலிக்கூறு, ஒலிக்கூட்டலாம் சொல்லின் கூறு; சொல்லின் பொருட்கூறு; பொருள் தொடர்பாகும் சொற்றொடர்க் கூறு என்பனவற்றைக் கொண்டது. இவற்றுடன் மொழித் தோற்றம், மொழி வரலாறு, மொழியைப் படைத்த மாந்தனின் வரலாறு, அவன் தோன்றி வளந்த நில வரலாறு, பல மொழிகளின் ஒப்பீடு இக்கலையின் உறவுக்கூறு.

அடிகளார் இவற்றையெல்லாம் அணுகியுள்ளார்; ஆய்ந்துள்ளார்; விளக்கியுள்ளார்; எழுதியுள்ளார். இக்கலை எழுத்துருவம் அவர் படைத்த பல நூல்களிலும் சிதறல்களாக உள்ளன. இதற்கெனத் தனியொரு நூலை அடிகளார் எழுதவில்லை. ஆயினும் அவ்வாறு எழுதும் எண்ணத்தைக் கொண்டிருந்ததைப் பாவாணரின் ஒப்பியல் மொழிநூலுக்குத்தந்த சான்றிதழில் எழுதியுள்ளார். அவ்வெண்ணத்தால் இரண்டு கட்டுரைகளை மொழியியல் கட்டுரைகளாக அறிவுக்கடல் இதழில் எழுதினார்.

மொழியியலைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் Philology என்பது Phiíos’ = GlưTựị: desire = g#fsu (#5)j, 5má; logos = Giá T6ủ; discourse =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/103&oldid=687171" இலிருந்து மீள்விக்கப்பட்டது