பக்கம்:தமிழ்மாலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00

14. வரலாற்றியல் (3 நூல்கள்)

அடிகளார்தம் வாழ்வு வரலாற்றில் இந்தி எதிர்ப்பு ஒர் உணர்வு எழுச்சி. இதைவிட மேலாக அவர் தம் உணர்வு வரலாற்றில் இருவர் வரலாறுகள் ஒன்றியவை. ஒருவர்உணர்வு மேம்பட்ட அறிவில் ஒன்றியவர்; அடுத்தவர் அறிவு மேம்பட்ட உணர்வில் ஒன்றியவர். முதல்வர் வழிபடுதெய்வம் போல் கொள்ளப்பெற்ற மணிவாசகர்; இரண்டாமவர் போற்றித் தெய்வமாகக் கொள்ளப்பெற்ற சோமசுந்தரநாயகர்.முன்னவர் சைவசமயக்குரவர் பின்னவர் சைவசித்தாந்த அறிஞர்.மணிவாசகர் தோன்றாத்துணையாய் ஆட்கொண்டவர். நாயகர் தோன்றும்துணையாய் உளங்கொண்டவர், மாணிக்கவாசகர் வரலாறு, சோமசுந்தரநாயர் வரலாறு' என்னும் இருநூல்களையும் வரலாற்றுநூலாகத் தமிழுக்கு வழங்கினார்.

சைவச் செம்மலார் இருவரின் வரலாற்று நூல்கள் இரண்டும் இருபேரொளி எனலாம். ஒன்று கதிரொளி; மற்றொன்று நிலவொளி. நிலவுத் தண்மையைக் கதிரிலும் கண்டவர் அடிகளார்; கதிர் வெம்மையில்லாமல் அதனையும் மடைமாற்றம் செய்ததுபோன்று அருள்தன்மை காட்டியவர் அடிகளார்.

கதைமாற்றம்

மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்வதற்கு அடித்தளமாக மாணிக்கவாசகர் வரலாற்றை உருவாக்கிய அடிகளார், வழங்கப்பெற்று வரும் மணிவாசகர் கதைகளிலுள்ள குறைகளைக் கழித்துள்ளார். திருவாதவூரர் புராணம் முதலிய மணிவாசகர் வரலாற்றுக் காப்பியக் கதைகளில் பிழையானவை, தவறானவை, புகுத்தப்பெற்ற வேண்டாதவை அனைத்தையும் ஆராய்ந்து உண்மை வரலாற்றைத் தந்துள்ளார். குருந்த மரத்தடியில் சிவபெருமான் அருளியமை, தில்லையில் திருவாசகம், திருக்கோவையார் படைக்கப் பெற்றமை முதலிய இன்றியமையா நிகழ்ச்சிகளை விளக்கி அவையவை நேர்ந்த காலங்களை வரையறுத்துக் கூறி வரலாற்றின் நெறியை நிறைவுபடுத்தியுள்ளார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைப் புராணத்தும் கண்டிக்கும் அடிகளார் இவ்வரலாற்றில் இதிலிருந்து சற்று நழுவுகின்றார்.இராமாயணத்தைச் சாடும் பாவேந்தர் இராவணனை ஏற்றார். இராவணனுக்குத் தலை பத்தென்பதை மறுப்பவர் அதற்கு மாற்று ஒன்றைநயமாகப் பாடினார்.

"ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்’ என்றார். 'இராவணன் பத்துத் தலை பொய்’ என்னும் அடிகளார் அதற்கு மாற்று சொல்லவில்லை. ஆனால் முருகனுக்கு ஆறு தலை’ என்பதற்கு மாற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/107&oldid=687175" இலிருந்து மீள்விக்கப்பட்டது