பக்கம்:தமிழ்மாலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

குமுகாயச் சீர்திருத்தத்தில் பெருநாட்டங் கொண்டவர் அடிகளார். அதனை முன்னர் அவர்தம் தமிழின ஊற்றப்பகுதியில் கண்டோம்.ஆண்பெண் சமானியத்தைத் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும்,திருக்குறள் திருக்கோவையார் முதலிய இலக்கியங்களும் காட்டுவதை விளக்குகின்றார்." தானே அவளே தமியர் காண" என்னும் களவியலில் ஆண்பெண் சமம் பளிச்சிடுவதைக் காட்டியுள்ளார். 'காகத்தின் இரு கண்போல'என்ற மணிவாசகர் தலைவன் தலைவி காதலின் சமபங்கைக் காட்டியுள்ளமை குறிக்கத்தக்கது.

சிறுவர் மணம், கைம்பெண் மணம், மகளிர்க்கு மறுமணம்-இவற்றை ஏற்று விளக்கும் அடிகளார் இவை குமுகாயத்தை வளமாக்கும் என்பது பாராட்டற்குரியது.

தமிழன் தான்.உலகிற்கு உழவுத் தொழிலை அறிமுகஞ் செய்தவன்; அவன் கொண்ட தனித்தன்மைகள் தாம் உலக நாகரிகத்தின் பிறப்பிடம்; அவற்றை விளக்கும் தமிழ் புலவோர் உலக நாகரிகத்தின் தாயார் என்பதை அவர்தம் 'வேளாளர் நாகரிகத்தில் பரக்கக் காண்கிறோம்.

முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூல் தமிழர் தம் பண்பார்ந்த வாழ்வியலை உலகோர்க்குத்தருவதைப்போற்றிப்பிற்காலத்தமிழ்ப் புலவோர் வேண்டாதன செய்தவற்றைக் கண்டிக்கிறார். தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்னும் ஒப்பீட்டு நூல் ஆங்கிலேயர் தமிழரிடமிருந்து பெறவேண்டிய குமுகாயப்பாங்குகளையும்,தமிழர் ஐரோப்பியரிடமிருந்து பெற வேண்டிய குமுகாய அறிவியல் முன்னேற்றங்களையும் வடித்துள்ளார்.

'பெற்றோர் கடமை களையும், குடிமக்கள் கடமை களையும் கூர்ந்து கண்டெழுதி மக்கள் குமுகாயம் கொள்ளவெண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் அறிவித்துள்ளார். முற்காலப் பிற்காலத் தமிழ்புலவோர் என்னும் நூலின் ஆங்கில வடிப்பாக Ancient and Modern Tamil Poets என்பதைத் தந்து உலகோர் அறிய நல்ல குமுகாய அமைப்பை நிறுவியுள்ளார்.

பாரதிப் பெருமகன் புராணங்கள் பற்றி வடித்துள்ள கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

“கடலினைத் தாவிய குரங்கும்-வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும் வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்

வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியினுள்ளே முழகிப்போய்-அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதி முறையாலே மணம் செய்த திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/98&oldid=687166" இலிருந்து மீள்விக்கப்பட்டது