பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


ஆட்சிக்கு உட்பட்டது. இக்காலத்தில் (1300-1947) தமிழைத் தக்கவாறு ஆதரித்தவர் மிகச் சிலர். அதனால் எண்ணிறந்த தலபுராணங்கள், உலா, தூது போன்ற சிற்றிலக்கியங்கள், இசுலாத்தையும் கிறிஸ்துவத்தையும் பற்றிய பெருநூல்கள் சிறு நூல்கள், திருவருட்பா, மனோன்மணியம் போன்ற நூல்கள் தோன்றின. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்பு அச்சுப் பொறியின் வாயிலாகச் செய்தித் தாள்களும் நூல்களும் அச்சிடப் பெற்றன. பள்ளிக் கூடங்கள் பெருகப் பெருக உரைநடை நூல்களும் பெருகின. 20ஆம் நூற்றாண்டில் உரைநடை நூல்களும் மொழி பெயர்ப்பு நூல்களும் பெருங் கதைகளும் சிறு கதைகளும் கவிதைகளும் வளர்பிறைபோல வளர்வனவாயின. இக் காலத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் பிற்காலம் என்னலாம்.

எனவே, தமிழ் இலக்கிய காலத்தைச் (1) சங்ககர்லம், (2) இடைக்காலம், (3) பிற்காலம் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பது பொருத்தமாகும். இம்மூன்று பிரிவு களுள் சங்ககாலமாகிய முதற் பிரிவில் அமைந்த நூல்களைப் பற்றிய விளக்கத்தை இந்நூலிற் காணலாம்.

தொல்காப்பியம் இன்னது-அதன் காலம் இன்னது-அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் இன்னவை-அவற்றாலறியப்படும் தமிழர் வாழ்க்கை முறை நாகரிகம் பண்பாடு இன்னவை-தொல்காப்பியத்தால் அறியப்படும் மொழி வரலாறு இது-இலக்கிய வரலாறு இது என்பன போன்ற பல விவரங்களும் இலக்கிய வரலாற்றில் இடம் பெற வேண்டும்; ஒவ்வொரு நூலைப்பற்றிய இத்தகைய விவரங்கள் இலக்கிய வரலாறு படிப்பவர்க்கு அந்நூலைப்பற்றி ஒரளவு அறிவைத் தரும். இந்த முறையில் இலக்கிய வரலாறு எழுதல் வேண்டும் என்ற எண்ணம் பல்லாண்டுகளாக என்னுள்ளத்தில் வேரூன்றி வளர்ந்து வந்தது.

ஆங்கில இலக்கிய வரலாறு பற்றிய நூல்களில் ஒரு நூலின் ஆசிரியர் பெயர், அவரது வாழ்க்கைச் சுருக்கம், காலம், அவர் செய்த நூல்கள், அந்நூற் செய்திகளின்