பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. குறுந்தொகை

முன்னுரை

நான்கடிச் சிற்றெல்லையும், எட்டடிப் பேரெல்லையுமுடைய 398 செய்யுட்களும் ஒன்பது அடியுள்ள இரண்டு. செய்யுட்களும் (307, 399) கொண்ட இந்நூல், ஐங்குறு. நூற்றுக்கு அடுத்த மேல் எல்லையில் (அடிகளைப் பொறுத்த, வரையில்) உள்ளதாகும். பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்து இதன்கண் இடம்பெற்றுள்ளது. இப்பாடல்களைத் தொகுத்தவன் பூரிக்கோ என்பவன். பெயரால் இவன் ஓர் அரசன் என்பது தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் அறியுமாறு இல்லை. இந்நூற் பாடல்கள் 20 புலவர்களால் பாடப்பெற்றுள்ளன. -- - - - -

இந்நூற் பாடல்கள் அகப்பொருள் பற்றியவை; குறிஞ்சி,

பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை ஒழுக் கங்களைப் பற்றிய பாடல்கள் இதன் கண் இடம் பெற். றுள்ளன. இந்நூலின் மூலத்தை மட்டும் முதன்முதல் வெளி யிட்டவர்தமிழறிஞர் சி. வை தாமோதரம்பிள்ளை என்பவர். பின்னர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் இதற்குப் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி முதலியவற்றை அரும்பாடுபட்டு எழுதியுள்ளார். இந்நூலில் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர்' உரை யெழுதினார் என்றும் சீவகசிந்தாமணியின் சிறப்புப் பாயிரத்தில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். அவ்வுரை இப்போது கிடைக்கவில்லை.

இனி இந்நூற்பாக்களைப் பாடியுள்ள சங்ககாலப் புலவர் பெயர்களைக் கீழே காண்க : . .