பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



டாக்டர் மா. இராசமாணிக்கனார்

801

நெறி தவறாது முறை செய்வர்: வாழ்க்கை இன்பத்தை நன்கு நுகரினும் யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை மறவார்; அவரே நற்பேற்றைப் பெறுவர்' (361).

" விரிந்த சிந்தையும் பரந்த நோக்கமும் உடைய பெரு மக்கள் உலகத்தில் எல்லா ஊர்களையும் தம் ஊர்களாகவே கருதுவர்; உலக மக்களைத் தம் உறவினராகவே எண் ணுவர்; தமக்கு வரும் ஆக்கமும் கேடும் தம்மாலேயே வருவன என்னும் உண்மையை மறவார்' ' (192) :

மறக்குடியில் பிறந்த ஒரு பெண்மணி பலருடைய கடமைகளைக் கீழ்வருமாறு கூறியுள்ளார் : மகனைப் பெற்று வெளியுலகத்திற்குத் தருதல் எனது கடமை: அவனைக் கல்வி கேள்வி ஒழுக்கங்களால் சிறந்தவனாகச் செய்வது தந்தையின் கடமை; அம் மைந்தனுக்குப் போர்க் கருவிகளைச் செய்து தருவது கொல்லனது கடமையாகும். நாட்டுக்குகந்த நன்மகனாக அவனை ஆக்குவது காவலன் கடமையாகும்; மிகச் சிறந்த போரில் ஆண் யானையைக் கொன்று பெயர் பெறுதல் அம் மைந்தன் கடமையாகும்' (312). இது பொன்முடியார் பாடலாகும். இவர் ஒரு பெண்பாற் புலவர். நாட்டில் பிறந்த குடிமகனான இளைஞனுக்கு யார் யார் எவ்வெவ்வாறு கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை இப் பெண்பாற் புலவர் அறிவுறுத்தும் திறம் பாராட்டத்தகும். உயர்ந்த பண்பாடு பெற்ற சமுதாயத்தில் தான் இத்தகைய உயர்ந்த கருத்துகள் வெளிப்படல் இயலும். -

பிசிராங்தையார்ஒரு புலவர். பல்லாண்டுகள் ஆகியும் அவர் தலையில் நரை இல்லை. புலவர். பலர் அதன் காரணத்தை அறிய அவாவினர். அப்புலவர் பெருமான் தமக்கு நரையின்மைக்குக் கீழ் வருமாறு நான்கு காரணங் களைக் கூறினார்: (1) என் மனைவியும் மக்களும் குணங் களாலும் செயல்களாலும் உயர்ந்தவர்; (2) என் இல்லத்து