பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pojamų antisauna umpaa aange- - > gananas 25 இல்லம்தோறும் ஆடுமாடுகளும் கால்நடைச் செல்வமும் மக்களுக்குத் துணையாக இருந்தன. தோட்டங்கள், துரவுகள், நந்தவனங்கள் சோலைகள், நீர்நிலைகள் நிறைந்து நாடும் நகரமும் அழகாக இயற்கையோடு இணைந்து இசைந்து காட்சியளித்தது. இவையெல்லாம் பாரத நாட்டின் நாகரிகச் செழிப்பையும் உயர்வையும் வெளிப்படுத்திக் காட்டியது. கம்பன் தமிழ் நாட்டையும் தமிழ் நகரங்களையும் நினைந்தே கோசல நாட்டையும் அயோத்தி நகரையும் அதன் சிறப்புகளையும் பாடினான். இவையெல்லாம் சமுதாய வளர்ச்சியின் மிக உயர்ந்த மேலான கட்டத்தை எடுத்துக் கூறுகின்றன. இவைகளுக்கு ஏற்றவாறு மொழியின் வளர்ச்சியும் வளமும் உயர்ந்து விளங்கியது. இலக்கியமும் கலையும் வளர்ச்சி பெற்று மொழியை வளர்த்தது. ஆடலும் பாடலும் கூத்தும் களிப்பும் கலை இலக்கியத்தை வளப்படுத்தி மொழியை மெருகு ஊட்டிவளர்த்தது. “வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் உள்ளமும், ஒருவழி ஒடநின்றவன்” என்று தசரதனுடைய நல்லாட்சியைப் பற்றிச் சிறப்பாகக் கம்பன் குறிப்பிடுகிறார். ஐம்புலன் உணர்வுகளை அளவுக்கு மீறிச் செல்லவிடாமல் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தி பகுத்தறிவின் மூலம் சரியான திசை வழியில் கொண்டு செல்லும் சிறந்த மனித ஆற்றலையும் திறனையும் அறநெறி வாழ்க்கையையும், சிறந்த ஒழுக்க நெறி வாழ்க்கையையும் பற்றியும் சிறப்பான கருத்துகள் நிறைந்த தனது அறிய சொற்களில் கம்பன் எடுத்துக் கூறுகிறார். “அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டன்” என்று கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். கம்பன் கையாண்ட இன்னும் சில தமிழ்ச் சொற்களையும் காண்போம்.