பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 45 காப்பியங்களையும், பக்தி இலக்கியங்களையும் நினைவு கொண்டோம். இன்னும் அக்காலத்தில் இதர பல எண்ணற்ற தமிழ் இலக்கியங்களும் அறநூல்களும், சிற்றிலக்கியங்களும் கிராமப் புற இலக்கியங்களும் தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குகின்றன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கவிதை வடிவங்களிலான இலக்கியங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் பல அடிப்படை நூல்களுக்கு உரை நூல்களும் தோன்றி நிலை பெற்றன. பேச்சு மொழிகள் எழுத்து மொழிகளாக, மக்கள் மொழி இலக்கிய மொழிகளாக இரண்டும் இணைந்தும், ஒவ்வொன்றும் சுயேச்சையாகவும், வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இலக்கியங்களை மக்களுக்கு விளக்கிச் சொல்லும் வகையில், விரிவுரைகள் ஆற்றும் முறைகளிலும் பேச்சு மொழிகள் வளர்ச்சி பெற்று அவையும் மொழியின் சொல்வளத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி (உற்பத்தி சாதனங்கள் உற்பத்திக் கருவிகள், மனித வளம் ஆகியவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் விரிவாக்கமும்) அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகங்களின் விரிவு, கல்வி கலாச்சார வளர்ச்சி, அரசியல் பொருளாதார சமூகக் கலாச்சார, சமூகவியல் அறிவியல் இலக்கியங்களின் வளர்ச்சி, ஆன்மீக இயக்க வளர்ச்சி, வெளித் தொடர்பு வாணிப வளர்ச்சி, மக்களுடைய சமுதாயப் பரிமாற்றம் தொழில் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, குறிப்பாக கட்டிடக் கலை பெரிய கோவில்கள் கோபுரங்கள் கட்டும் கலை தொழில் நுட்பங்கள், நீர்நிலைகள் நிர்மாணிக்கும் தொழில் நுட்பங்கள், வைத்தியம், மருந்தியல் பற்றிய பல இலக்கியங்கள்