பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479

479

வாரி, வட்டை , வரி, வயவை, வகுந்து, செலவு, சிறுபதம், வழிக் கிளவி யாகும்.

என்னும் திவாகர நூற்பாவால் உணரலாம். இப்பாட லில், வழி என்னும் பொதுப் பொருளைக் குறிக்க இருபத்தொரு பெயர்கள் உள்ளமை ஓர்க. இப்பாடலில் இத்தனை பெயர்கள் இடம் பெற்றிருந்தும், தென் தமிழ் நாட்டினர் வழியைக் குறிக்க வழங்கும் 'தடம்' என்னும் பெயர் மட்டும் இடம் பெறாதிருப்பது வியப்பா யிருக்கிறது.

ஒரு பிள்ளை பிறந்தால் முதலில் பெற்றோர்கள் ஒரு பெயர் இடுகின்றனர். அது இயற்பெயர் எனப்படும். பின்னர் அவர்களே செல்லப் பெயர்கள் வேறு வைப்பார்கள். போதாக்குறைக்குப் பாட்டன் - பாட்டி முதலியோர் அழைக்கும் செல்லப் பெயர்கள் வேறு. பின்னர் பெரியவரானதும், உலகியலில் உயர்வு சிறப்புப் பெயர்களோ அல்லது இழிவு சிறப்புப் பெயர் களோ ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு எத்தனை பெயர்கள் ஏற்படினும், இறுதியில் ஏதாவது ஒரு பெயர்தான் நின்று நிலைத்து நீடிக்கும்; அஃதே எக் காலத்தும் எவ்விடத்தும் எல்லோராலும் பரவலாக அழைக்கப்படும்; மற்ற பெயர்களோ, எப்போதோ ஒரு நேரத்தில்தான் - எங்கோ ஓரிடத்தில் தான் - எவரெவரோ ஒவ்வொருவரால்தான் அழைக்கப்படும். எல்லா ஒரு பொருள் பல் பெயர்களின் நிலையும் இது போன்றதே!

ஒருபொருள் பல்பெயர்களுக்குள்ளே, சில பெயர்கள் செய்யுள் வழக்கில் மட்டும் வரும்; சில பெயர்கள் பேச்சு வழக்கில் மட்டும் வரும்; ஒரு சில பெயர்கள் இரு வழக்கிலும் வரும். அவற்றுள்ளும் ஒன்றிரண்டே பெருவாரியாக வழங்கப்படும். ஒருவர் எத்தனை வகைக்