பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

489

489

போலவே அண்ணனும் ஆய்விட்டான் குழந்தைக்கு. 'அண்ணனைக் காணாம்' என்பதற்குப் பதிலாக - அண் ணன் தாராந்து போயிட்டான்' என்று குழந்தை சொல் கிறது. இப்படியாகக் குழந்தை மொழிக்குள் நுழைந்து ஆய்ந்தால், எண்ணற்ற எடுத்துக் காட்டுக்கள் கிடைக்

கும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், மக்களினத்தின் வளர்ச்சியாகட்டும் - மொழியின் வளர்ச்சியாகட்டும் - . குழந்தை நிலையில் தானே இருந்திருக்க முடியும்! எனவேதான் மொழி தோன்றிய முதற்காலத்தில் சொல்வளம் பெருகாமையால், மக்கள் தொடர்புடைய பல பொருள்களை ஒரே சொல்லால் குறித்து வந் திருப்பர்.

இந்தக் காலத்தில் கூட, புதிதாக ஒரு மொழி கற் றுக் கொள்பவர்கள், தொடக்கத்தில் தாம் அறிந்த சில சொற்களைக் கொண்டே பல கருத்துக்களைத் தப்பா கவோ தவறாகவோ பேசுவதையும் எழுதுவதையும் காணலாம். எனவே, ஒரு சொல் பல் பொருள்கள், மொழியின் தொடக்க கால நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்துக்கொண்டு மொழியில் சொல் லேழ்மை இருப்பதாகக் கொள்ளக்கூடாது. எம் மொழி யிலும் முதற்காலத்தில் சொல்லேழ்மை இருக்கத்தான் செய்யும். நாளடைவில் தான் மொழிகள் சொல்வளம் பெற்று வளர முடியும். ஒருவன் முப்பது வயதில் பெற்றிருக்கும் வளர்ச்சியை மூன்று வயதில் பெற்றிருந் திருக்க முடியாதன்றோ? ஒரு மொழி தோன்றிப் பன் னெடுங்காலம் ஆன பிறகும் சொற்களஞ்சியம் நிரம்ப