பக்கம்:தமிழ் அங்காடி.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கதைப் பகுதி

13. பிறந்த நாள்()

கிராமச் சூழ்நிலையில் பழகிய எனக்குச் சென்னை வாழ்க்கை மிகவும் புதுமையாக இருந்தது. சென்னையில் வேலை கிடைத்ததுகூடப் பெரிதில்லை. ஒரு வீட்டின் தெருப் பக்கத்து அறையை வாடகைக்கு அமர்த்த நான் பட்டபாடு தெய்வம் அறியும்.

வெளிவேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால், நான் உண்டு என் அறை உண்டு, அவ்வளவுதான். புகைவண்டிச் சந்திப்பைப் போன்ற அந்த வீட்டில் ‘வச வச’ என்று குடியிருக்கும் மற்றவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை. ஆனால் நான் விரும்பாவிட்டாலும், எதிர் வீட்டில் நடக்கும் சில நிகழ்ச்சிகள் மட்டும் பலகணி (சன்னல்) வழியாக எனக்குத் தெரியும்.

எதிர் வீட்டுச் சிறுமி கமலாவும் சிறுவன் சேகரும் என் அன்றாடக் காட்சிப் பொருட்கள். அந்தச் சின்னஞ் சிறுசுகளோடு அந்த வீட்டு அம்மா பர்வதம் கொஞ்சும் காட்சியைக் கண்டு நான் சுவைப்பதுண்டு. பர்வதம் கொஞ்சுவதுபோல அவள் கணவன் கமலநாதன் குழந்தை களோடு கொஞ்சாதது எனக்கு வியப்பாகவே இருந்தது.

குழந்தைகளிடமே பாசம் இல்லாதவர் மற்றவரிடம் எப்படியிருப்பாரோ என்று கமலநாதனைப் பற்றி ஒரு