பக்கம்:தமிழ் அங்காடி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214  தமிழ் அங்காடி



கடவுளர் பகுதி


17. தமையன்-தங்கையின் மலர்கள்


கழகக் காலத்திற்குப் பிற்காலத்தில், இலக்கிய ஆசிரியர்கள் கடவுளர்களை நேரில் கண்டு கூறுவது போல் அவர்தம் உருவங்களைப் பற்றிப் பல்வேறு செய்திகள் கூறியுள்ளனர். மற்றும், மக்களுக்குள் உறவு முறை கூறுவது போல் கடவுளர்கட்குள்ளும் உறவு முறை கூறியுள்ளனர். திருமால் உமாதேவிக்குத் தமையனாம் - அங்ஙனமெனில், உமாதேவி திருமாலுக்குத் தங்கை என்பதும் பெறப்படும்.

திருமாலோடு தாமரை மலரும், உமாதேவியோடு குவளை மலரும் தொடர்புறுத்தப் பட்டுள்ளன. இப்படி யெல்லாங்கூடத் தமிழ்ப் பாடல்களில் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

இன்றைய அறிவியல் உலகில் உள்ளவர்கள், நம் முன்னோர்களின் கடவுள் கொள்கைகளை அறிந்து, அவற்றின் அடிப்படையில் எண்ணிப் பார்த்துத் தம் கடவுள் கொள்கையை இப்போது வகுத்துக் கொள்ளல் வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரை தரப்பட்டுள்ளது.

இனி, கடவுள் தமையன் - தங்கை பற்றியும், அவர்கட்கு உரிய மலர்கள் பற்றியும் கூறும் இலக்கிய அகச்சான்றுகளைக் காண்போம்,

ஒருவகை இலக்கியச் சுவைக்காகவும் செய்தித் தொகுப்புக்காகவும் இந்தக் கட்டுரை தரப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/216&oldid=1204371" இலிருந்து மீள்விக்கப்பட்டது