பக்கம்:தமிழ் அங்காடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 தமிழ் அங்காடி


சுவிட்சர்லாந்தில் இருக்கும் கரிக் (Zurich) பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

தனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய சுரிக் பல்கலைக் கழகத்தில் 1905-ஆம் ஆண்டு இயற்பியல் பேராசிரியராய் அமர்ந்தார். அலுவலுக்கிடையே ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவருவது தொடர்ந்து கொண்டிருந்தது.

1913-ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியும், 1914-ஆம் ஆண்டு பிரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினர் பதவியும் தேடிவந்தன.

ஆய்வுகள்

1905-ஆம் ஆண்டளவில் இவர், ஒரு பொருளின் நிறையும் அதன் ஆற்றலும் சமம் என்று கூறியிருந்தார். அந்த ஆய்வைத் தொடர்ந்து, 1916-ஆம் ஆண்டு 'சார்புக் கொள்கை’ (Theory of Reletivity) பற்றிய ஆய்வு கட்டுரையை உலகுக்குத் தந்தார். உலகமே வியந்தது.

பின்னர் இவர் இயக்கம் பற்றி ஆராய்ந்தார். நியூட்டனின் இயக்க விதிகட்கு மாறான கருத்து வெளியிட்டார். இதனால் நியூட்டனின் இயக்க விதிகட்குச் செல்வாக்கு குறைந்தது. மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பூமியின் சுழற்சி, ஒளியின் விரைவு ஆகியவை பற்றியும் ஆராய்ந்தார்.

தெளிவாகச் சொல்ல வேண்டுமாயின், இவர் பின்வருவன பற்றிப் புரட்சிமிக்க கட்டுரைகளை வரைந்தளித்தாள்:

‘இயங்கும் பொருள்களின் மின்னியக்க ஆற்றல்’
'பிரவுனின் இயக்கம் பற்றிய விதிமுறை’
'ஒளியின் தோற்றங்களும் மாறுபாடுகளும்'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/26&oldid=1203084" இலிருந்து மீள்விக்கப்பட்டது