பக்கம்:தமிழ் அங்காடி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  285


          சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
          சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
          பொலந்தெரி மாக்கள் கலங்குஅஞர் ஒழித்தாங்கு
          இலங்குகொடி எடுக்கும் நலங்கிளர் வீதியும்
          நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
          பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து
          நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
          நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்
          அம்பண அளவையர் எங்கணும் திரிதரக்
          காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு
          கூலம் குவித்த கூல விதியும்..” (192-211)

என்பது பாடல் பகுதி. ஒன்பது மணிகளின் இயல்பை ஆராய்ந்து அறிபவர் இருக்கும் கடைத் தெருவில் பகைவர் வருவார் என்ற அச்சமே இல்லையாம். அவ்வளவு காவல் உள்ள பகுதி அது.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகையான பொன் கட்டிகளை விற்பவர், கொடி கட்டி விளம்பரம் செய்து விற்பராம்.

இந்தக் காதையில், ஒன்பது மணிகளின் இயல்புகளும் அவற்றை ஆராய்ந்து காணுவோரின் பொருளறிவும் விளக்கப்பட்டுள்ளன.

அங்காடித் தெருவில் வண்டி வகைகள், அங்குசம், சாமரம், தோற் கடகம், கவசம், குத்துக்கோல், செம்பாலும், வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பொருள்கள், படைக்கல வகை, மாலை வகை, ஆனைக் கொம்பு, தொழில் கருவிகள், சாந்து வகைகள் முதலியவை மயங்கிக் கிடக்கும்.

அறுவைக் கடைகளில் பருத்தி, பட்டு, எலிமயிர்

முதலியவற்றாலான ஆடைகள் ஒவ்வொரு வகையிலும் நூற்றுக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/287&oldid=1204510" இலிருந்து மீள்விக்கப்பட்டது