பக்கம்:தமிழ் அங்காடி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் பகுதி

1. ஆனைக்கும் அடி சறுக்கும்

அறிமுகம்

‘ஆனைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழியில் உள்ள ஆனைக்கும் என்பதன் ஈற்றில் உள்ள ‘உம்’ என்பது, ஆனைக்கு அடி சறுக்காது - சில நேரத்தில் அதற்கும் அடி சறுக்கலாம் என்னும் பொருளைத் தருகிறது.

ஆனைக்கு அடி சறுக்காததற்கு உரிய காரணம் என்ன? சறுக்கவைக்கும் பாசி மேலோ சேற்றின் மேலோ ஆனை கால் வைத்தால், ஆனையின் பளுவால் கால் பாசிக்கும் சேற்றுக்கும் உள்ளே சென்று பதிந்துவிடும். எனவே சறுக்காது. அதற்கும் எப்போதாவது தகாத சூழ்நிலை காரணமாகச் சறுக்கலாம் போலும்.

வாழ்க்கையில் சறுக்காமல் ஆனைபோல் உயரிய புகழ் பெற்றவர்களுள் சிலர், சில நேரம் சறுக்கி விடுவதும் உண்டு. அவ்வாறு சறுக்கிய மேதைகளுள் அரிஸ்ட்டாட்டில் (Aristotle) என்பவரும் ஒருவர். அரிஸ்ட்டாட்டிலின் வரலாற்றை அறிந்தால், அவர் எதில் எவ்வாறு சறுக்கினார் என்று தெரிந்து கொள்ளலாம்.