பக்கம்:தமிழ் அங்காடி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76  தமிழ் அங்காடி


                "புலமிக் கவரைப் புலமை தெரிதல்
                புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
                பூம்புனல் ஊர பொதுமக்கட் காகாதே
                பாம்பறியும் பாம்பின கால்"

என்னும் பாடலிலிருந்து கம்பர் கடன் வாங்கியதாகும். பாம்பின் காலைப் பாம்பே அறிய முடியும்; அதுபோல் புலவரின் புலமையைப் புலவரே அறிய முடியும் என்பது கருத்து.

பாம்புக்குக் கால் இல்லை எனப் பொதுமக்கள் எண்ணிக் கொண்டுன்ளனர். பாம்புக்கும் கால்கள் உண்டு. அதன் அடிப்பகுதியில் பல செதில்கள் இருப்பதைக் காணலாம். அந்தச் செதிள்களே கால்கள். அந்தச் செதிள்களால் தரையிலுள்ள மண்-துரசு துரும்பு போன்றவற்றைப் பற்றிக் கொண்டு நகர்கிறது. வழவழப்பான பளிங்குத் தள வரிசையில் விட்டால் பாம்பால் நகர முடியாது.

எனவே, பாம்பின் கால்களைப் பாம்பே அறிய முடிவது போல், அரக்கரின் சூழ்ச்சியை அவர்களைச் சேர்ந்த என்னால்தான் அறிய முடியும் என்றாள் அவள்.

மேலும் கூறினாள்: பெரியவராகிய நீ என்னை மணந்து கொள்ளாவிடின், உன் தம்பி இளையவர்க்காவது என்னை மணம் முடித்து வைக்கின் உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவுவேன்.

மூக்கு இல்லாதவளோடு நான் வாழமாட்டேன் என்று உன் தம்பி தெரிவித்தால், இடையே (இடுப்பே) இல்லாதவளோடு (சீதையோடு) நீ எப்படி வாழ்கிறாய்? அதைக்கூறி இளையவரோடு என்னைச் சேர்த்துவிடு என்றாள்:

             “பெருங்குலா உறுநகர்க்கே ஏகுநாள்
                 வேண்டும் உருப் பிடிப்பேன் அன்றேல்
             அருங்கலாம் உற்றரிந்தான் என்னினும் ஈங்கு
                 இளையவன் தான் அரிந்தநாசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/78&oldid=1202305" இலிருந்து மீள்விக்கப்பட்டது