பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# 9 (7) திருமங்கையாழ்வார் இவரது இயற்கை பெயர் கலியன் இவருக்கு மற்றைப் பெயர்கள், கலிகள்ளி, மாகாலன், நீலன் என்ப தாம் இவற்றுள் நீலன் என்பது இயற்கை பெராகவும், மற்றவை கார ணப் பெயர்களாகவும் கொள்ளப்படுகின்றன. மாகாலன் என்பது பகைவர்களுக்கு யமனப் போன்றவர் என்று பொருள்படும், கலியன் என்பது சேனைத் தலைவன் எனும் பொருளுடைத்து: கலிகள்ளியென் ருல் கலியை துவம்சம் செய்தவர் என்று பொருள் தந்திடும். இவருக்கு அரட்டமுக்கி என்றும் சிறப்புப் பெயர் உண்டு. அரட்டு+அமுக்கி= குறும்பை அடக்கியவர் என்ரும். (8) தேசிகர். இவருக்குத் தற்காலம் வழங்கும் பெயர் வேதாந்த தேசிகர் என்னும் சிறப்புப் பெயராம். தேசிகன் என்ருல் குரு என்று பொருள்படும். இவரது இயற் பெயர் வேங்கடநாதன் என்பதாம் திருவேங்கடத்திலெழுந்தருளியிருக்கும் விஷ்ணுமூர்த்தியின் வரப்பிரசாதத்தால் உதித்தபடியால் இவரது தாய் தந்தையர் இப் பெயரை இவருக்கு இட்டனர்போலும். இவரது பாசுரங்களின் கடை யில் இவரது இயற்கை பெயரை அமைத்து இவர் பாடியிராவிட்டால் இவரது இயற்கை பெயர் மறைந்துபோயிருக்கலாமன்ருே ? மேற்குறித்த பூர்வீக பெயர்கள் ஆராயுமிடத்து, அக்காலத்தவர் ' ஊரைச் சொன்னலும் பேரைச் சொல்லாதே என்னும் பழமொழியை மிகவும் கைப்பற்றி நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமிருக் கிறது. மத்திம காலத்தில் மனிதரின் பெயர்கள் இவைகளே நாம் பெரும்பாலும் கி. பி. 1000 முதல் 1300 அல் லது 1400 வரையில் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளினின்றும் அறிகிருேம்; இவைகளுக்கு உதாரணமாக :-காங்கேயராயன், லங் கேஸ்வரன், காளிகேசன், காளிமாரன், வயிற மேக படாரன், தாரைக் காணி சிங்கன்-கூறலாம். இவைகளும் பெரும்பாலாக காரணப் பெயர்களாகவே காண்கின்றன. - தற்கால மனிதர்களின் பெயர்கள் தற்காலத் தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களின் பெயர்களைக் கருது மிடத்து நூறு பெயர்களை எடுத்துக்கொண்டு ஆராய்வோமாயின்,