பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


?? மாகிறது. தற்காலமும் கார்காத்தார் என்று பிரிவினர் தெற்கில் தமிழ் நாட்டில் உளர்: - - (4) "இடையர். இடைநிலத்திலிருப்பவர் என்று பொருள்படும். அதாவது குறிஞ்சி நிலத்திற்கும், முல்லை நிலத்திற்கும் இடையிலிருப் பவர்களாம். இவர்களுக்கு ஆயர் என்று பெயர் உண்டு. ஆ என்ருல் பசு. பசுக்களை மேயப்பவர்களாதலால் இப்பெயர் பெற்றனர். இவர்கள். வசிக்கும் ஊர்களுக்கு பாடி என்று பெயர் ஆயர்பாடி என்பதைக் 岛顶6恼岳。 (5) மறவர், பாலே நிலத்தில் வசிப்பவர்களுக்கு மறவர் என்று பெயர். மறம் என்ருல் வலிமை வீரம் என்று பொருள்படும். (6) உழவர் மருத நில மக்களுக்கு இப்பெயர். உழுது பயிர் செய்பவர்கள் என்ரும். (7) வேடர் வேட்டையாடி ஜீவிப்பவர் இவர்களுக்கு எயினர் என்றும் பெயர். (8) கள்ளர். கள்ளத்தொழிலினுல் இப்பராவார்கள். (9) பரவர் நெய்தல் நிலவாசிகள், அதாவது கடற்கரையோரம் இருப்பவர்கள். இவர்களுக்கு கரையார் என்றும் பெயர் ; சமுத்திரக் கரையில் வசிப்பதில்ை இப்பெயர் பெற்றனர் . இவர்களுக்கு பரதவர் என்றும் பெயர் உளது. - - - மரவர், எயினர், பரதவர் இவர்களெல்லாம் நாகர் எனும் பூர்வீக ஜாதியாரின் பிரிவென்று காலஞ்சென்ற தமிழறிஞர் கனசுந்தரம் பிள்ளை அவர்கள் எண்ணுகிருர். நாகர் என்னும் பெயர், நாகசின்னத்தை அவர்கள் தலையிலணிந்தபடியால் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். (10) குறும்பர் இவர்கள் ஒரு மிகப் பூர்வீக ஜாதியார். தொண்டை நாட்டில் வேளாளர் வருவதற்கு முன் இங்கு இருந்தவர் கள். குறும்பு எனும் பதத்தினின்றும் இப்பெயர் இவர்களுக்கு வக் திருக்க வேண்டும் தேகமெல்லாம் மயிர் வளர்ந்திருந்தமையால் இவர்களுக்கு இப்பெயர் வந்தது போலும். குறும்பாடு எனும் தற்கா லத்தில் வழங்கும் ஓர் ஆட்டு ஜாதியைக் காண்க, குறும்பாடுகளே