பக்கம்:தமிழ் இனம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சிக்கலி

103

8. தோழியும் தலைவியும் உரையாடல்

தோழி: நங்காய், தன்னிடத்துப் பொருகின்ற யானை ஒத்த தன்மைகெட்டு மனமுடைந்து உள்ளே உருகுவான் போல ஒருவன் என்னை நோக்கிப் பலகாலும் வருகிறான்.

தலைவி: நீ தெருவில் கலங்குவோரைக் கண்டெல்லாம் கவலைப்படல்-காசியில் பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் பெருமக்கள் செயலை ஒத்துளதே!

தோழி: தலைவன் தன் நோய்க்கு நீயே மருந்து என்கின்றான். என் செய்வோம்?

தலைவி: (நகைத்து) யென் செய்வோம் ............ உலக ஒழுக்கத்தைத் தப்பி ஒருவன் தெருவில் நின்று கூறுங்கூற்றை உண்மை என்று கொண்டு, அதன் உண்மையை உணரேமாய்ப் பேசல் நன்றென்று கூறக்கடவேம்.

தோழி:- நின் கருத்து இதுவாயின், ஒருவன் சாதல் எளிதென்று கூறக்கடவோம்.

தலைவி: குடிப் பிறந்தார்க்குரிய ஒழுக்கமற்ற நெஞ்சுடையார்க்கு இறத்தலே நன்றென்று கூறு. (செ. 24)

இவ்வுரையாடலில் நகைச்சுவை, தலைவியின் கற்பொழுக்கம், உலக ஒழுக்கத்திற்கு அக்காலத்திலிருந்த மதிப்பு, குடி ஒழுக்கத்தைப் பாதுகாத்தல், பிறர்க்கிரங்கும் தோழியின் உயர்நிலை, இன்ன பிறவும் கண்டு களிக்கலாம். இவை போன்ற அரிய செய்திகள் பலவற்றை நூற்கொண்டு உணர்ந்து மகிழ்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/100&oldid=1356880" இலிருந்து மீள்விக்கப்பட்டது