பக்கம்:தமிழ் இனம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 தமிழ் இனம்

அம்பையும் வில்லையும் கொடுத்தல் மரபு. கணவன் உடன்பிறந்தாராக இல்லாதிருப்பின், ஒரு கணவன் வில்லையும் அம்பையும் கொடுக்குமாறு ஏற்பாடு செய்யப்படும். அங்ஙனம் கொடுத்தவன் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கும், வேறு ஒரு கணவன் அம்பும் வில்லும் கொடுக்கும் வரையில், தந்தையாகக் கருதப்படுவான். இச்சமூகத்தில் பெண்கள் தொகை குறைவு. அதனால் இச்சமூகத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ‘

மலையாளத்தில்

(1) தென் மலையாள மாவட்டத்தில் ஐம்பதாண்டுகட்கு முன்னர் இப்பழக்கம் தீயர் ‘ என்னும் வகுப்பாரிடம் இருந்து வந்தது. ”

(2) தென் மலையாள மாவட்டத்தில் உள்ள பாணர்’ என்னும் வகுப்பாரிடமும் இப்பழக்கம் இருந்து வருகிறது.

(3) கணியர்’ என்னும் வகுப்பாரிடமும் இப்பழக்கம் இருந்து வருகின்றது. மணம் செய்து கொள்ள விரும்பும் சகோதரருள் மூத்தவன் மணம் பேசி முடிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் செல்வான் ; அவளுக்கு மணஆடை கொடுப்பான் ; மறுநாள் அவளையும் அவள் பெற்றாேரையும் உறவினரையும் தன் வீட்டுக்கு அழைத்து வருவான். அங்கு விருந்து ஒன்று நடைபெறும். மணப்பெண்ணும் அவளை மணக்க இருக்கும் சகோதரர் அனைவரும் 2. Castes and Tribes of S. I., vol. VII, p. 142. 3. Ibid. p. 48, 4, Ibid, wol, VI, p. 31.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/105&oldid=1359759" இலிருந்து மீள்விக்கப்பட்டது