பக்கம்:தமிழ் இனம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழ் இனம்

ஆர். கர் என்ற மேனாட்டறிஞர், “மலையாளச் சட்டப்படி நாயர்கள் திருமணம் செய்து கொள்ளலாகாது. அதனால் பலர் கூடி ஒருத்தியை மனைவியாக ஏற்பாடு செய்துகொள்கின்றனர். பகல் பன்னிரண்டு மணியிலிருந்து மறுநாள் பகல் பன்னிரண்டு மணி வரை ஒருவன் அம்மனைவியோடு வாழ்கிறான். இவ்வாறே அக்கணவன்மார் தம்முள் ஏற்பாடு செய்துகொண்டு வாழ்கின்றனர்,” என்று குறித்துள்ளார்.[1]

இமயமலைச் சாரலில்

இமயமலைச் சாரலில் வாழ்கின்ற மலைவாணர் பலரிடம் இதே பழக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது.

“இதுகாறும் கண்ட இலக்கியச் சான்றுகளாலும், வழக்குச் சான்றுகளாலும் ஒருத்தி ஐவரையோ, பலரையோ மணந்து வாழ்தல் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்பதை அறியலாம். இதற்கும் சிவபெருமானுக்கும் கடுகளவும் தொடர்பில்லை, என்பது நன்கறியப்படும். உண்மை இங்ஙனமிருக்க, பாஞ்சாலி ஐவரை மணந்தமைக்குத் தெய்வீகத் தொடர்பு கற்பிக்கப்பட்டிருத்தல் வியப்பன்றாே?” என்று சிலர் ஐயுறலாம்.

இடைச்செருகலும் கற்பனையும்

இன்று பெரும்பாலான இனங்களைச் சேர்ந்த மக்களுள் ஒருவன் ஒருத்தியை மணந்து வாழும் முறையே வழக்கில் உள்ளது. ஆனல், இதே


  1. 7. I bid, vol, V, pp. 307–313.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/109&oldid=1357780" இலிருந்து மீள்விக்கப்பட்டது