பக்கம்:தமிழ் இனம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்தினை அமுதம்

45


முல்லையின் முறுவல்

தலைவனது சிறு பிரிவில் மனைவி ஆற்றியிருத்தல் முல்லை என்பது. ஏனைய நிலங்களைவிட முல்லை நிலம் அழகானது , முல்லை மலர்மாலைக் காலத்தே முறுவல் செய்வதே போலத் தலைவியை நோக்கி மலர்கின்றது. முல்லை நில மக்களாகிய கோவலர் தம் கன்று காலிகளை வீடுகட்கு ஒட்டிக் கொண்டுவரும் காட்சி கண்டு களிக்கத்தக்கது. வெளியிடம் சென்று மீளும் காலிகளும், முல்லையந் தீங்குழலும், முல்லை மலரும், தலைவிக்குப் பிரிந்து போன தலைவனை நினைப்பூட்டுகின்றன. அப் பொருள்களைக் காண்கையில் தலைவி தலைவனை நினைத்து வருந்துகின்றாள். தலைவி தோழியை நோக்கி,

"எல்லை கழிய முல்லை மலரக்
 கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
 இரவரம் பாக நீந்தினம் ஆயின்
 எவன்கொல் வாழி தோழி !
 கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே"

—குறுந்தொகை, 387.

என்று கூறுவதாகவுள்ள செய்யுள் தலைவனது பிரிவால் அவட்கு உண்டான எளிய நிலையை எழிலுறக் காட்டுகின்றது. இங்ஙனமே, பிரிந்து மீளும் தலைவன் தன் பாகனை விழித்து, “ பாக, என் மகனுக்குக் கதைகள் கூறுபவளாகிய என் காதலிக்கு என் தோள்கள் (விரைய அவளை அனைத்தற்கு) வருகினறன எனக் காக்கைகள் என வருகையை முன்னரே உணர்த்தியிருக்குமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/42&oldid=1534073" இலிருந்து மீள்விக்கப்பட்டது