பக்கம்:தமிழ் இனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தினை அமுதம்

47

துள்ளது. தலைவவனோடு விளையாடியதன் பயனாக யான் இங்ஙனமே விளிவதோ ? கடற் கழியில் வெண் குருகு கத்துகிறது ; அலைகள் கரையைப் பொருகின்றன ; குளிர்ந்த பூஞ்சோலையின் நறுமண மலர்களை அலைகள் சிதற அடிக்கின்றன."

"தொல்கவின் தொலைத்து தோள்நாலம் சாஅய்
அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ?
வெண்குருகு நரலும் தண்கமழ் கானல்
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதருந் துறைவனொ(டு)
இலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே ?

- குறுந்தொகை, 381

என்று இவ்வாறு பண்டவன் பண்பும் , இன்னல் தரும் தன் ஏகாந்தமும் எண்ணித் எண்ணித் தலைவி ஏங்குதல் முதலியன ' நெய்தல் நெகிழ்ச்சி' யாகும்.

மருதத்தின் மாண்பு

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். இதன் ஒழுக்கம் ' ஊடல் ' என்பது ; ஊடல் நிகழ்ந்த வழிக் ' கூடலும் 'ம் உண்டென்பது கூறாது அமையுமெனக் கொள்க. எனினும் இவ்வூடற்குக் காரணம் யாதென ஓர்வது உறுபயன் விளைப்பதாகும். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் நிலங்களின் அமைப்பும் தொழிலும் நோக்குவோர்க்கு ஆடவர்தம் அரிய நேரம் மிகக் குறுகியதென்பது தெளிவு. அந்நிலங்களில் உணவு தேடலிலேயே ஆடவனது பகற் போதெல்லாம் செல்லும் இயல்பினது.அவனைப் போன்றே, மகளிரும் தினைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/44&oldid=1507214" இலிருந்து மீள்விக்கப்பட்டது