பக்கம்:தமிழ் இனம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழ் இளம்

விழாமுற்றத்தை அணிசெய்ய வருகின்றாள் : அவளால் கலக்குறா வகையில் நம் கொழுநனைக் காமின்” என எச்சரிக்கின்றாள் :


“மடக்கண் தகரக் கூந்தற் பணைத்தோள்
வார்ந்த வரலெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற்
பிணையல் அந்தழைத்தை இத்துணையிலள்
விளவுக்களம் பொலிய வந்துதின் றனளே
எழுமிலனோ எழுமினெங் கொழுநற் காக்கம்!”

— நற்றிணை, 170

தலைவன் பரத்தையர் ஒழுக்கத்தில் இருத்தலேயறிந்த தலைவி வருந்தி, இல்லறவியல் வழாது நடந்து வருதலையும் தாங்கள் விரும்புவது இன்ன தென்பதையும், தலைவனைக் கண்ட தோழிகள் அவற்கு எடுத்தியம்புதல், நூல்களில் இன்பம் பயக்கும் பகுதிகளுள் ஒன்றாகும்.


விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே ; யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்டுறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க எனவேட் டேரமே

—ஐங்குறு நூறு, 2.

(தலைவியைத் தோழிகள் ‘யாய்’ என்னல் நூல் வழக்கம்.) இதனால் தலைவியின் இல்லறச் சிறப்பு இனிது விளங்கும். பரத்தையரை விட்டுத் தன்னிடம் வந்த தலைவனை நோக்கித் தலைவி,


“வேண்டேம் பெரும,நின் பரத்தை
ஆண்டுச்செய் குறியோ டிண்டுநீ வரலே”

— ஐங்குறு நூறு, 48
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/47&oldid=1507229" இலிருந்து மீள்விக்கப்பட்டது