பக்கம்:தமிழ் இனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணகி

53

வேறல்ல. இதற்குப் பெளத்த-சமண-வைதிக மதங் கள் தமிழகத்திற் பரவியதே காரணம் என்க.

மேற்கூறப்பெற்ற களவு-கற்பு என்னும் இரு வகைக் கைகோளும் கண்ணகி மணத்தில் நடைபெற்றன என்பது ஈண்டறியத் தகுவது.

"உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியும் காதலர்க் குரிய"

என்பது அகப்பொருள் இலக்கணம். இம்முறையில்

உள்ளப் புணர்ச்சி கண்ணகிக்கும் கோவலற்கும் உண்டாயிருந்த தென்பது உணரத்தக்கது. கண் ணகியுடனிருந்த ஆயத்தார் கோவலனது பெருமை யையும் அருமையையும் பலபடப் பாராட்டிப் பேசி

வந்தனர் என்பதே இதற்குப் போதிய சான்று.

"அவனுந்தான்,
மண்தேய்த்த புகழினன் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினல் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலனென்

பான்மன்"
- மங்கல வாழ்த்துக் காதை

எனவரும் இளங்கோ அடிகளின் இன்னுரை நோக்குக. மேலும் கண்ணகி கோவலனையே மனத் துட் கொண்டிருந்தாள் என்பது கண்ணகியை மணத்திற்கு முன் வாழ்த்திய மாதர் வாய்மொழியி னின்றும் அடிகளின் அன்புரையினின்றும் தெளிவாதல் காணத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/50&oldid=1358678" இலிருந்து மீள்விக்கப்பட்டது