பக்கம்:தமிழ் இனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

55

களவு மணம் நடைபெற்ற பின்னர்க் கற்பு மனம் நடைபெறுதல் பண்டை வழக்கமென முற் கூறப்பட்டதன்றாே ? அஃதே போல, ஈண்டுக் கண் ணகிக்கும் கோவலற்கும் கற்பு மணம் கவினுற நட்டைபெற்றது. மணச் செய்தி மாநகரத்தார்க்கு அறிவிக்கப்பட்டது. இங்ஙனம் அறிவிக்கப்பட்ட செய்தி வேறெந்துாலுள்ளும் காணப்பெருத புதுமை வாய்ந்ததாகக் காணப்படுதல் கவனிக்கத்தக்கது. அஃதாவது, யானைமீது பெண்கள் பவனிபோந்து, மாநகர்க் கீந்தார் மணம் . இங்ஙனம் பெண்கள் யானைமீதமர்ந்து மணச்செய்தியை மாநகர்க்கறி வித்தல் வேறு தமிழ் நூல்களில் யாம் கண்டிலேம்'.

இனித் திருமணச் சடங்குகளைக் காண்போம் : அகநானூற்றுச் சடங்குகட்கும் இச்சடங்குகட்கும் வேறுபாடு காணப்படுகிறது. பண்டைத் தமிழர் மனத்துள் பார்ப்பான் இல்லை. இங்கோ, (1) மாமுது பார்ப்பான் காட்சியளிக்கிருன் ; (2) தீவலம்’ காணப்படுகிறது ; (3) பாலிகைகள் தோன்று கின்றன. இம் மூன்றும் அகநானூற்றில் காணப் பெற்றில. அங்குச் செய்யுள் 88 கூறுவது: உணவுக் குவியல் கிடந்தது. நல்லோரையிற் பெண்டிர் சிலர் (புதல்வரைப் பெற்றவர்) அலரி கலந்த நீரால்,

"கற்பின் வழாது நற்பல வுதவிப்
பெற்றேன் பெட்கும் பிணையை ஆகென"

லால்குடியை அடுத்த பூவளுரில் வாழும் சைவச் செட்டிமார் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து குடியேறிய வர் என்று தம்மைக்கூறிக்கொள்கின்றனர். திருமணச் செய்தியைப் பெண்கள் யானைமீது சென்று உற்றார் உறவினருக்குக் கூறுதல் இச்செட்டிமாரிடம் சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கில் இருந்து வந்ததாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/52&oldid=1358703" இலிருந்து மீள்விக்கப்பட்டது