பக்கம்:தமிழ் இனம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

61

கூந்தல் நெய்யணி மறந்தது. இப்பரிதாப நிலைமை உண்மைக் காதலியிடம் இன்றும் காணப்படுதல் கண்கூடு. இப்பரிதாப நிலை-தனித்த தையல் நிலை-பரிதபிக்கத் தக்க காட்சி ஆகும்.

இங்ஙனம் கண்ணகி தனித்திருந்த போது இந்திரவிழா நடந்தது. அதுபோது கோவலன்மாதவி இருவரும் இன்பக்கடலுள் திளைத்தனர். கண்ணகியோ தனித்துயர் உற்று உருவழிந்து வருந்தினுள். மாதவி கண்கள் கோவலனது சேர்க்கையால் செந்நிறமடைந்து நீர் உகுத்தன ; கண்ணகியின் கண்கள் வருத்த மிகுதியால் நீரைச் சொரிந்தன. இந்நிலை நினைந்து நெக்குருகத் தக்கது.

இந்நிலையில் கண்ணகி தீக்கனு ஒன்றைக் கண்டாள்; கண்டு நடுநடுங்கித் ‘தேவந்தி’ என்னும் பார்ப்பனத் தோழியிடம் கூறி, மதுரையில் இனி நடைபெறப்போகும் செயல்களை விளக்கி வருந்தினாள். அந்நிலையில் தேவந்தி, கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் தோஷ நிவர்த்தி செய்து கொள்ள அழைத்தாள். ஆளுல் கண்ணகி, “ பீடன்று ” (குலத்திற் பிறந்தார்க்குப் பெருமையன்று) எனக் கூறி மறுத்தாள். இவ்விடம் உன்னி உன்னிச் சுவைத்தற்குரியது.

உடன் போக்கு

இங்ஙனம் கண்ணகி கூறியிருந்தபேரது கோவலன்-வெறுப்பால் மாதவியை விட்டு நீங்கிய கோவலன்-கண்ணகி பள்ளியறையுட் புகுந்து, அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/58&oldid=1357004" இலிருந்து மீள்விக்கப்பட்டது