பக்கம்:தமிழ் இனம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் இனம்

முடியாத அளவில் முன்னேறி வருகின்றன. அந்நாடுகளில் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதனால் செருப்புத் தைக்கும் சக்கிலி, தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் எளிய மகன், செங்கல் எடுக்கும் சிற்றாள், பயிர்க் கொல்லையைக் காக்கும் பணிமகன் போன்றவரும் உழைப்பால் உயர்ந்து அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தலைக் காண்கிறோம். அங்கு ஒவ்வொருவரும் அடுத்தவரைத் தம் இனத்தவராகவும் நாட்டவராகவும் கருதிப் பண்புடன் நடந்துகொள்ளும் பழக்கம் பெற்றுள்ளனர்.

இத்தகைய இன வாழ்வு நம் நாட்டில் இல்லாமைக்குக் காரணம் யாது? இந்த நாட்டில் பலவகை உட்பிரிவுகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான சாதிகள் இருக்கின்றன என்று கூறுதல் தவறாகாது.[1]எல்லா நாட்டிலும் மக்கள் பல தொழில்-


  1. “The elaborate institution known as the caste system among the Hindus in India may almost be said to be without a Parallal in the world... To-day cast is rigidly fixed by birth and excclusive commensality and comubium between the members of a Cast-group to the exclusion of all others are its fundamental and outstanding characteristics. Further the conception of impurity communicable to a higher caste by contact with a lower underlies this fissiparous tendency, and has resulted in the untouchability of the so-called sudra, who by popular extor is almost identified with the Panchama, or one out side the fame work of the chaturvarnya. Ağain, in place of the four orginal varnas or class groups, there are to-day, thousands of Caste divisions and sub-divisions, and the number is still growing.” —“The vedic A&e”, R. C. Majumdar, pp.384-5.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/7&oldid=1378650" இலிருந்து மீள்விக்கப்பட்டது