பக்கம்:தமிழ் இனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழ் இனம்

யானையின் கனவும் நனவும்

யானை புலியோடு போரிட்டு வென்றது ; வென்ற வருத்தத்தோடே தூக்கத்தில் ஆழ்ந்தது ; அதன் நனவே கனவில் தோன்ற வெருவி எழுந்தது ; அருகில் மலர்ந்திருந்த வேங்கை மரத்தைப் புலியென நினைத்தது ; கொண்டது சீற்றம் ; அதனைத் தன் வலிய கொம்புகளாற் குத்தி அதன் எழிலைக் கெடுத்தது ; சினம் தணிந்த பின்னரே தான் தாக்கியது மரம் என்பதை அறிந்தது ; அறிந் ததும் நாணித் தலை கவிழ்ந்தது. (இத்தகைய குறிஞ்சி நில விலங்குகளின் செயல்கள் பல இப் பகுதியிற் கூறப்பட்டுள்ளன.) (செ. 10)

சொல் நயம்

(1) தோழி இரவில் வருந் தலைவனை வழியின் அருமை கூறிப் பகல் வருக என்றல் :-” ஐயனே, நீ இத்தலைவிபால் காதல் உடையை என்பதோ இனிது ஆனால் இடி என்றும் மழை என்றும் பாராமல் அஞ்சத்தக்க இரவில் நீ வருதல் இன்னாது. இவள்பால் நீ அன்புடையை என்பதோ இனிது ; ஆனால் முகில்கள் படியும் மலைக்கணவாய் வழியே நீ இரவில் வருதல் இன்னாது. நீ இவள்பால் அருள் உடையை என்பதோ இனிது ஆனால் யானை உலவும் அரிய வழியில் நீ வேலேந்திவரல் எமக்கு இன்னாது. ‘ (செ. 13)

(2) தோழி, இரவில் தலைவனது வருகை துன்பமானது என்று கூறி, விரைவில் மணஞ் செய்து கொள்ளுமாறு தலைவனைத் தூண்டுதல் :” தலைவி செய்த குறியிடத்தே நீ இராப் போதில்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/89&oldid=1390535" இலிருந்து மீள்விக்கப்பட்டது