பக்கம்:தமிழ் இனம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சிக்கலி 6

தெய்வங்கள்

குறிஞ்சிக்கலியுள் கூறப்பெற்றுள்ள தெய்வங்கள் :

(1)சிவபிரான் உமையம்மை

            இமயமலையில் இருத்தல் ; இராவணன் கயிலையைப்

பெயர்த்தல். (செ. 2) (2)தெய்வமகளிர் - இவர்கள் பந்தாடிய இளைப் புத் தீர மலையருவியில் நீராடல் உண்டு ( செ. 4) (3 )வரையுறை தெய்வம் - இதற்குப் பலியிடல் குறவர் மரபு. ( செ. 3, 16 ) (4)முருகக் கடவுள் - குறவர் திணை நிலத் தெய் வம். குறத்தியர், தலைவனுக்கும் முருகற்கு மாக ஏற்ப வள்ளைப் பாட்டுப் பாடல் மரபு. (செ. 7 ) (5)கஜலட்சுமி - இஃது ஏனைய தொகை நூல் களில் அருகியே காணப்படுகிறது. (செ. 8) (6)பிரமன் - இவன் வல்லவன் ’ (படைத்தல் தொழில்) எனப்படுகிறான்(செ. 20)

7. புராணக் கதைகள் சிவபெருமான் இமயமலையை வில்லாகக் கொண்டது. ( செ. 2)

இராவணன் கயிலையைப் பெயர்த்தது. ( செ. 2)

1 நெடுநல் வாடையுள் மட்டுமே காணப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/94&oldid=1361494" இலிருந்து மீள்விக்கப்பட்டது