பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 {} தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை லும் உண்ணும் பழக்கம் அவனிடம் என்றுமே இருந்த தில்லை. விருந்தோம்புதலை ஒருவேள்வி என்றும் அந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று கூறுவதற்கு ஒர் அளவு இல்லை என்றும், விருந்தினராக வந்தவரின் தகுதிக்கு ஏற்ற பயன் உண்டாகும் என்று வள்ளுவர் கூறியதைப் பொன்னேபோல் போற்றுபவன் தமிழன். இதற்கு அதியமான் நெடுமான்அஞ்சியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்று சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. ஒருகால் வேட்டைக்குச் சென்ற அதிய மான் மலையிடத்தே பிளவின்கண் கண்ட அருநெல்லி மரத்தினின்று இனிய கனியைப் பறித்து வந்தான். அதன்ை உண்டோர் நெடிது வாழ்வர் என்பதை அறிந்தவன். அவ்வமயம் ஒளவையார் அவன் அவைக்கு வந்திருந்தார். அக்கனியை அதியமான் ஒளவைக்கு ஈந்து அவரை உண்ணு. மாறு செய்தான்: உண்ட பின்னரே புலவர் அக்கனி வாழ் நாளை நீட்டிக்கும் என்பதை அறிந்தார். . ஒளவையார் பெருவியப்புற்று நீ நெடிது வாழ நினை யாது, எனக்குத் தந்து என்னை நெடிது வாழப் பண்ணிய நின் பெருந்தகைமையை என்னென்பேன்? இந்நெல்லிக் கனியின் அருமை கருதாது எனக்குத் தந்து சாதலை நீக்கிய நீ, நீலமணி மிடற்றுக் கண்ணுதலப்பன் போல மன்னு: வாயாக’’ என்று வாழ்த்துகின்றார். 'பால்புரை பிறைநுதல் பொலிந்து சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே; தொன்நிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா(து) ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எனக்கீந்த தனையே’ 82. புறம் - 91