பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1. 3 # தாங்குகின்றது! அதனால் நிலத்தின் ஆற்றல் குறைந்து போவதில்லை. அதுபோல தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்வது சிறந்த அறம். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (151). என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு பொறுக்கப் பொறுக்க ஆற்றல் வளருமேயன்றிக் குறையாது என்பது அப்பெரு மானின் கருத்து. இல்வாழ்வார் ஒவ்வொருவரும் பிறரோடு தொடர்பு கொள்ளுகின்றபோது அவரால் தமக்கு உண் டாகும் சுமைகளையும், இடர்களையும், துன்பங்களையும் எவ்வளவுக் கெவ்வளவு தாங்கிப் பொறுக்க முடியுமோ அவ்வளவும் பொறுத்துக் கொண்டு பழக வேண்டியுள்ளது. பலர் விலங்கு போன்றவர்கள்; நல்லது கெட்டது அறி யாதவர்கள்; தக்கவர்களைத் தக்கபடி மதித்து நடக்கத் தெரியாதவர்கள்: இனித்தான் அவர்கள் வாழ்க்கை வளர்ச்சி அடைதல் வேண்டும். இவர்களையும் அனைத் துக்கொண்டு வாழவேண்டியது இல்வாழ்வானின் கடமை; இவர்கள். அறியாமையால் தீங்கு செய்யும்போதும் அதனைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும் என்றும், அதுதான் வல்லமையுள் வல்லமை யாகும் என்றும் கூறு வார் அப்பெருந்த ைக. தீமை செய்தவர்க்குத் தீமையே செய்து அவர்களைத் தண்டிப்பதும் ஒருமுறை. இதனால் ஒருவர்க்கும் பயன் இல்லை. தண்டித்தவர் சினத்தால் அவ்வாறு செய்கின் றாராதலின் அவர் மனம் கெடுகின்றது; அவர் மனவலிமை அற்றவராகவும் கருதப்படுவார். தண்டிக்கப்பட்டவர் இதனால் திருந்துகின்றாரா? அதுவும் இல்லை; அவர் மனமும் கெட்டழிகின்றது. அதனால் சான்றோர் தீமைக்குத் தீமை செய்து ஒறுத்தவரை ஒரு பொருளாக மதிப்பதில்லை; பொறுத்தவரையே பொன்போல் போற்றி இடைவிடாமல் நினைத்து மதிப்பார்கள் (155). இது