பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置龛6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அச்சமே கீழ்களது ஆசாரம் (10.75) என்று பிறி தோரிடத்தில் கூறிய வள்ளுவர் பெருமான் இந்த அதி காரத்தில் வினைகளுக்கு அஞ்ச வேண்டும் என்கின்றார். 'அஞ்சல் அறிவார் தொழில் (428) என்று அவர் வேறோர் இடத்தில் கூறுவது அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்கு. அஞ்சுவது அஞ் சாமை பேதைமை யாதலால் வினைக்கு அஞ்சுதலைச் சான்றோர் முக்கியமாகக் கொள்வர். 'விழுமியார் அஞ்சுவர் (201) என்பது அவர் கூற்று. பிறர்க்கு எது செய்தாலும், செய்வாரும் அதன் பயனை அடைந்தே தீரவேண்டும். இதனைத் தெளிவாக உணர்ந் திருந்தால் மட்டுமே அவர்கள் தீவினைக்கு அஞ்சி வாழ்க் கையில் எவர்க்கும் யாதொரு கேடும் செய்யாமல் நடந்து கொள்ள முடியும்; நாட்டு மக்களுக்குத் தீவினையில் அச்சம் இல்லையென்றால் நாடு கொடுமையான வனமாகக் கெட்டொழியும். மறந்தும் பிறன் கேடு சூழற்க (204), இலன் என்று தீயவை செய்யற்க’ (205) எனைத் தொன்றும் துன்னற்க தீவினைப்பால்’ (209.). என்பவை யெல்லாம் இந்த அதிகாரத்தில் ஒளிரும் அறிவுடைச் சுடர்கள். நம் போலியருக்கு வாழ்க்கையில் வழி காட்டும் ஒளி விளக்குகள். வள்ளுவர் பெருமான் தீயவைகளைத் தீயைவிட மிகுதி யாக அஞ்சுகின்றார். அழிவு செய்யும் தீ அப்போது அந்த இடத்தில் மட்டும் தீமை விளைவிக்கும்; ஆனால் தீய செயல் வேறு காலத்திலும் வேறு இடத்திலும் வந்து தீமை செய்யும். ஆகையால் தீயைவிட மிகுதியாகத் திச் செய லுக்கு அஞ்ச வேண்டும் (202). இதை உணர்வதே அறிவின் பயன். அறிவு நிலைகள் பலவற்றிலும் தலையாயது பகை வர்க்கும் தீமை செய்யாமல் விடுவதாகும் (203). எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும் (207).