பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感每份 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வெறுங்கை நாற்றினன்; விழுதுடை பாலன்ன மெய்யன்' 1.அறம் - தருமம்: ஆர்ப்ப - ஆர்ப்பரிக்க நிலம் விரல் கிளைத்திட - கால் விரல் நிலத்தைக் கீறிக் கொண்டி ருக்க; இறங்கு கண்ணினன் - கீழே பார்க்கும் கண்ணை யுடையவனாய்; எல்-ஒளி; வெறுங்கை - ஆயுதங்களை இழந்த கை; நாற்றினன் - தொங்க விட்டிருப்பவன்; விழுதுடை ஆல் - விழுதையுடைய ஆலமரம்! என்று காட்டுவான், இராவணன் நின்ற நிலையில் அவன் செருக்கெல்லாம் அழிந்து நிற்கின்றது. நேராகப் பார்க்கக் கூட கூசுகின்றான்; அவனது பார்வை கீழ் நோக்கியுள் ளது. முகத்தில் ஒளி இல்லை; தலையிலும் மணிமுடி இல் லாததால் பிரகாசம் இல்லை. பெரிய ஆலமரம் ஒன்று தொங்கும் விழுதுகளுடன் காட்சி அளித்தாற் போல், தனது இருபது கைகளைத் தொங்க விட்டுக் கொண்டு தன் உடலை இராமன்முன் காட்டிக் கொண்டு நிற்கின் றான். மானம் இழந்த நிலையில் இயற்கையிலேயே கருமை நிறம் வாய்ந்த அவன் உடல் இன்னும் கறுத்து விடுகின்றது; மீறி நிற்கும் நாணத்தால் கால் விரல்களால் நிலத்தைக் கீறிக்கொண்டு நிற்கின்றான். "அறநெறிப்படி நில் லாது மனம் போனபடியெல்லாம் போகும் மனிதர்களின் செயல் இப்படித்தான் முடியும்' என்று உலகத்தவர்கள் முழக்கம் செய்து நிற்கின்றனர். இந்நிலையில் அவனை வெல்லுதலும் எளிது; கொல் லுதலும் எளிது. இராமன் அவனது தனிமையைக்கண்டு இரக்கம் கொள்ளுகின்றான். விரைந்து இலங்கை மாநக ரிலுள்ள சுற்றத்தாருடன் போய்ச்சேருமாறு பணிக்கின் றான். மற்றும், 183. யுத்த. முதற்போர்-250