பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நிறுத்தவும் நாம் எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள் யாவரும், முன் வர வேண்டும். வள்ளுவர் வகுத்த நெறி யிலும் பண்டைய சான்றோர்கள் சுட்டிய வழிகளிலும் வாழ முயல வேண்டும். இவற்றைக் கடைப் பிடிக்க இய லாதவர்க்கும் நரிவெரூஉத்தலையார் எல்லாரும் கடைப். பிடிக்க எளிய வழி ஒன்றைக் காட்டியுள்ளார். அந்த வழி அவர் காலத்தில் உறைந்த சான்றோர்கட்கும் கூறும், முறையில் அமைந்துள்ளது. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே -புறம் 195. (அல்லது - தீவினை: ஒம்புமின் - பரிகரியுமின்; ஆறு - நெறி1 இந்த வழியையாவது கடைப்பிடித்தல் நமக்கும் நல்லது: நாட்டிற்கும் உகந்தது. இத்துடன் இப்பொழிவு நிறைவு பெறுகின்றது.