பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2翠器 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தானத னுக்கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைதிறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்துந்தீர்த்(து). அறங்காப்பான் அல்லனோ?” என்பது சேக்கிழார் பெருமானின் திருவாக்கு. பெரிய புராணத்தில் இது மனுநீதிக் சோழன் வாக்காக வந்துள் ளது. மனுநீதிச் சோழனைச் சிலப்பதிகாரம், வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியில் மடித்தோன்" என்று நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இளவரசன் தேரின்மீது உலாப் போகுங்கால் இளைய ஆன்கன்று ஒன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்து படுகின்றது. அதற்கு அரசன் தன் மகனுக்கு விதித்த தண்டனை இது; ஒருமைத்தன் தன்குலத்துக்(கு) உள்ளான்என் பதும் உணரான் தருமம்தன் வழிசெல்கை கடனென்று கடன்மைந்தன் மருமம்தன் தேராழி உறஊர்த்தான் மனுவேந்தன்' என்று சேக்கிழார் காட்டுவர். இதனைப் பழமொழி ஆசிரியரும், 5. பெரிய புரா. திருநகரச்சிறப்பு - 36 6. சிலப். வழக்குரை. 53.55 7. பெரிய புரா. திருநகரச்சிறப்பு-44,