பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 6器 போன்றவை இல்லையென்று உறுதியாகச்சொல்ல முடி யாதல்லவா? (அ) இல்லற இயல் இதன் முதல் இயலாகிய இல்வாழ்க்கை’’ என்பதில் நல்லாற்றின் நின்ற துணை' (41) என்பதில் கல்லாறு' என்ற பெயரும், 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவதெவன்? (46) என்பதில் 'அறத்தாறு’ என்ற பெயரும் வருகின்றன. ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா (48)இல் ஆறு' என்ற பெயரும் உள்ளது. இதனால் 'நல்லாறு' என்பது 'அறத் தாறு தான் என்பதை அறிய முடிகின்றது. மேலும்(46)இல் வரும் புறத்தாறு' என்னும் சொல் வெளித் துறவைக் குறிப்பதோடு 'அறத்தாறு' என்பதற்கு எதிர்ச்சொல்லாக வும் அமைகின்றது. இதனால் 'அறத்தாறு’ 1 * என்பது வெளித்துறவைக் குறிக்காமல் சிறப்பாக இல்லறநெறியைக் குறித்தல் துணியப்படும். 'அறன் இழுக்கா இல்வாழ்க்கை’, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற தொடர்கள் இக்கருத்தை மேலும் வலுப்படுத்தும். அப்படியாயின் 'நல்லாறு' என்பதும் இல்லறத்தையே குறிக்கின்றது என்பது தெளிவாகின்றது. இல்லறம் அல்லது நல்லறம் அன்று' என்று ஒளவைப்பாட்டி பாராட்டிய அறத்துப் பாலின் இல்வாழ்க்கைச் சிறப்புப் பெயராக வருவதால் அறத்துப்பாலில் திருவள்ளுவர் ‘புறத்துறவுக்கு ஒருப்பட வில்லை என்பது தேற்றமாக அமைகின்றது. இதனால் இல்லற இயலும் இதன் அதிகாரங்களும் அதிகாரப்பொருள் களும் அவற்றில் வரும் அறக் கடமைகளும் முதலிலேயே இடம் பெறுகின்றன. இல்வாழ்வான் அறமாகக் கருதவேண்டிய கருத்துகள் இருபது அதிகாரங்களில் கூறப்பெறுகின்றன. இவற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆராயலாம். 60. கொன்றை வேந்தன்-3 த.இ.அ-5