பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118



களி = மகிழ்வு, இன்பம், கள், செருக்கு, தேன், மதம், மயக்கம், வண்டல், கஞ்சி, குழம்பு
களிகூர்தல் = மனம் களித்தல், களிப்பு மிகுதல்,களிமண்
களிகை = மொட்டு, கழுத்தணி, களிதூங்குதல், மகிழ்ச்சி மிகுதல்
களித்தல் = கள் உண்ணல், மகிழ்தல்
களிப்பு = மயக்கம், இன்பம், செருக்கு, மண்பசை
களிம்பு = அழுக்கு, குற்றம்
களியாட்டு = கட்குடி, மயக்க ஆட்டம்
களிறு = ஆண்யானை, அஸ்த நாள், ஆண் பன்றி
களேபரம் = உடல், என்பு, பிணம்
களை = அழகு, காந்தி, குற்றம், அயர்வு
களைகட்டல் = களைபிடுங்கல்
களைகண் = ஆதரவு, புகல், இடம்
களைகொட்டு = களை எடுக்கும் கருவி
களைஞர் = களைபறிப்பவர்
கள் = வண்டு, களவு, தேன்
கள்வன் = நண்டு, யானை, கரியவன்
கள்ளில் = கள், கள்கடை
கறங்கு = காற்றாடி, சுழற்சி, ஒலி, பம்பரம்
கறங்குதல் =ஒலித்தல், சுழலுதல்
கறவை = பால் தரும் பசு
கறளை= குள்ளன், வளர்ச்சியின்மை
கறி= மிளகு, இறைச்சி, மரக்கறி
கறு = கோபம், அகங்காரம்
கறுத்தல் = கோபித்தல், முற்றுதல்
கறுப்பு = கோபம், கறுநிறம், குற்றம், கறை
கறும்புதல் = துன்புறுத்துதல்
கறுழ் = கடிவாளம்
கறை = உரல், இரத்தம், கடமை, களங்கம், கறுப்பு, இருள், குடியிறை, குற்றம், விஷம், நிறம்
கறைக்கண்டன் = சிவன்
கறையடி = யானை
கற்கசம் = உலோபம், வன்னெஞ்சம்
கற்காணம் = கல்செக்கு
கற்கி =குதிரை, கற்கி அவதாரம், கோயில்
கற்சிறை = மதகு, கல்வரம்பு
கற்பகம் = தென்னமரம், கற்பக விருட்சம், பனை மரம்