பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வசநீயம்

356

வச்சிரன்


  
வசநீயம் = வார்த்தை
வசந்தகாலம் = சித்திரை, வைகாசியின் பருவம்
வசந்தத்துரு = மாமரம்
வசந்ததூதம் = குயில், பாதிரி மரம்
வசந்தம் = இந்திரன் மாளிகை, இளவேனில், சுகந்தம், சல்லாபம்
வசந்தருது = இளவேனில் பருவம்
வசந்தன் = தென்றல் காற்று, மன்மதன்
வசம் = விருப்பம், கீழ்ப்படிதல், ஆயத்தம், பிரபுத்தன்மை
வசவன் = பசுவின் ஆண் கன்று
வசனம் = புடவை, நோன்பு, பழமொழி, உரைநடை
வசனித்தல் = சொல்லல்
வசி = குற்றம், கூர்மை, தழும்பு, திரட்சி, வசியம், இருப்பிடம், வாள், மழை, பிளப்பு, சுவாதீனம், ஐம்பொறிகளை அடக்கியவன்
வசிதல் = பிளத்தல், வளைதல், வடுப்படுதல்
வசித்துவம் = எண் வகைச் சித்திகளில் ஒன்று
வசிவு = பிளப்பு
வசு = கிரணம், சூரியன், செல்வம், நீர், நெருப்பு, பொன், இரத்தினம், இனிமை, சுவாலை, ஒரு தேவன்
வசுகம் = எருக்கஞ்செடி
வசுகிரி = பொன்மலை
வசுதை = பூமி
வசுநாள் = அவிட்ட நட்சத்திரம்
வசுந்தரை = பூமி
வசுமதி = பூமி
வகை = குற்றம், மூளை, பசு, மலட்டுப்பழிப்பு, நிணம்
வசைதல் = வளைதல், வசைகூறல்
வசையுநர் = பகைவர்
வச்சயம் = மான்
வச்சிரதந்தி = ஒரு புழு
வச்சிரத்துரு = கள்ளிமரம்
வச்சிரதரன் = இந்திரன்
வச்சிரபாணி = இந்திரன்
வச்சிரபாதம் = இடி
வச்சிரம் = ஒருபிசின், சதுரக்கள்ளி, வெள்ளைத் தருப்பை, வச்சிராயுதம், வயிரமணி, மரவயிரம், உறுதியானது
வச்சிரவல்லி = பிரண்டை
வச்சிரன் = இந்திரன்
வச்சிராயுதன் = இந்திரன்
வச்சிரி = இந்திரன்