பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வசனாதி

429

வேதாக்கினி


  
வசனாதி(5) = வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்.
 
வணிகர்க்குரிய குணம்(8) = தனியாக எதையும் செய்தல், கோபம் கொள்ளாமை, இடந்தெரிந்து நடத்தல், பொழுதோடு சேர்தல், உறுவது தெரிதல், இறுவது அஞ்சாமை, சம்பாதித்தல், பகுத்தல்.
 
வண்டு (4) = கரும்பு, தேன், ஞிமிறு, வண்டு.
 
வண்ணம்(5) = வெண்மை , கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
 
வருணம்(4) = பிரம்ம, க்ஷத்திரிய வைசிய, சூத்திரர்.
 
வழக்கு(2) = செய்யுள் வழக்கு, உலக வழக்கு.

வாசம்(5) = இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம், (பஞ்சவாசம்).
 
வாயில்(9) = கண் 2, காது 2, மூக்குத்துளை 2, வாய், குதம், (நீர்கழிவாயில்) குய்யம், (மலங்கழிவாயில்) (நவத்துவாரம்).
 
வாயு(10) = பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன், (தசவாயுக்கள்).
 

வி


விட்டுணுவின் குரு(4) = சிவபெருமான், நந்தி தேவர், உபமன்யு முனிவர், வசிட்டர்.
 
வித்தியாதத்துவம் (7) = காலம், நியதி, கலை, வித்தை , இராகம், மாயை, புருடன்.

வித்தைகள் (14) = வேதம் 4, வேதாங்கம் 6, உபாங்கம் 4.

விநாயகர் சத்திகள் (3) = சித்தி, புத்தி, வல்லபை.
 
விரை(5) = கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம், (பஞ்சவாசம்).
 
வினை(2) = நல்வினை தீவினை

வே


வேதம்(4) = இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், (வேறுவகை) ஆயுற்வேதம், அருத்தவேதம், தனுர்வேதம், காந்தருவவேதம்.
 
வேதாக்கினி(3) = ஆகவநீயம், தக்கினாக்கிநியம், காருகபத்தியம்.