பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் புராணம்

495

சோண சைல மாலை


சே

சேக்கிழார் புராணம் = இது பெரியபுராணம் பாடிய சேக்கிழாரது வரலாற்றைச் சிறந்த சைவசிந்தாந்த பேராசிரியர் சிதம்பர தீட்சத மரபினர் கொற்றவங்குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகளால் பாடி அமைக்கப்பட்ட நூலேயாகும். இந்நூலால் பெரியபுராணச் சிறப்பு, சேக்கிழார் மாண்பு, வேளாளர் பெருமை முதலானவை நன்கு தெரியவரும். காலம் கி.பி.19ஆம் நாற்றாண்டு.

சேத்திரவெண்பா : 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்ட நூல், ஐயடிகள் காடவர்கோன் என்பவரால் பாடப்பட்டது. நூலாசிரியரது உளத்தைக் கவர்ந்த சைவ க்ஷேத்திரங்கள் ஒவ்வொன்றன் மீதும் ஒவ்வொரு பாடலாகப் பாடப்பட்ட நூல். கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இது தோத்திர வடிவிலும் உபதேசவடிவிலும் அமைந்த நூல்.

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் = அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் பாடப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டு.

சேனாவரையம் : தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் எழுதிய உரையே இந்நூலாகும். சொல்லதிகாரத்திற்கு இதனினுஞ் சிறந்த உரை வேறு இல்லை. காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.

சை

சைவசமய விளக்க வினாவிடை = சைவசமயத்தில் உள்ளவர் தம்மத ஒழுக்கங்களை எம்முறையில் கையாள வேண்டும் என்னும் முறைகளைத் தெற்றத் தெளிய உணர வேண்டி வசன வடிவில் கேள்வியும் பதிலும் கொண்டு எழுதி அமைக்கப்பட்ட நூல். எழுதியவர் காஞ்சி சபாபதி முதலியார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

சைவசித்தாந்த ஞான போதம் = இது ஒர் உரைநடை நூல். சைவசித்தாந்தச் சிறப்பை ஆணித்திரமாக எடுத்துக் கூறும் நூல். ஆசிரியர் மறைமலை அடிகள். காலம் 20-ஆம் நூற்றாண்டு.

சோ

சோண சைல மாலை = திருவண்ணாமலை மீது துறைமங்